சமீபகாலமாக நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட நடிகை ஹன்சிகாவின் குளியல் வீடியோ இணையதளங்களில் வெளியானது நினைவிருக்கலாம். ஆனால் இதை நடிகைகள் யாரும் பெரிய பொருட்டாக கருதவில்லை. அவரவர் வேலையை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இந்நிலையில் இதுகுறித்து நடிகை டாப்ஸி கருத்து தெரிவித்துள்ளார். அதில், சில நடிகைகளின் போலியான ஆபாச எம் எம் எஸ் களை சில விஷமிகள் நெட்டில் பரவ விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும். மேலும் என்னை பொறுத்தவரையில் லிவ்இன் ரிலேஷன்ஷிப் ஒன்றும் தவறு இல்லை. திருமணத்திற்குப் பிறகும் கணவன்-மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு அது விவாகரத்து வரை செல்வது இன்று வாடிக்கையாகி வருகின்றது. இதனால் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதேசமயம் திருமணத்திற்கு முன்பே ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டால் சந்தோஷமாக வாழலாம். அதனால லிவ்இன் ரிலேஷன்ஷிப் சரிதான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கல்யாணத்து முன்னாடி சேர்ந்து வாழ்வது தப்பில்லை: சொல்கிறார் டாப்ஸி
Popular Categories



