விஜய் படத்திற்காக கோவா பறந்த அட்லீ – ஜி.வி.பிரகாஷ்

g.v.prakash atlee1விஜய்யின் புலி படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. இந்த படம் முடிந்தவுடன் அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். காதல் கலந்த ஆக்ஷன் படமாக கதையை உருவாக்கியுள்ளார் அட்லீ. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கவிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். விஜய்யின் 59வது படத்தின் மூலம் ஜி.வி அரை சென்சுரி போடவிருக்கிறார். இப்படத்தின் பாடல்களை சூப்பர்ஹிட்டாக வரவேண்டும் என்பதற்காக பாடல் உருவாக்குவதற்காக ஜி.வி.யும் அட்லியும் தற்போது கோவா சென்றுள்ளனர். ‘சைவம்’ படத்தின் மூலம் தேசியவிருது பெற்ற உத்ரா உன்னிகிருஷ்ணன் இப்படத்தில் ஒரு பாடலை ஏற்கெனவே பதிவுசெய்துவிட்டாராம் ஜி.வி.பிரகாஷ்.