ஜெயலலிதா இல்லாததால், சில நடிகர்களுக்கு குளிர்விட்டுப் போயிருக்கிறது என்று, சர்கார் படத்தை தொடர்பு படுத்தி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாகியுள்ள சர்கார் திரைப்படம் குறித்த சர்ச்சை அதிகம் வெடித்துள்ள நிலையில், அமைச்சர்கள் சட்ட நடவடிக்கை எடுப்பதாகக் கூறி வருகின்றனர். ஜெயலலிதாவின் பெயர் தவறுதலாகப் பயன்படுத்தப் பட்டிருப்பது, அரசின் இலவச பொருள்களை தீயிட்டுக் கொளுத்துவது என சர்கார் படம் இப்போது மாநில அரசின் அமைச்சர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் இயற்பெயர் என்று கூறப்படும் கோமளவல்லி என்ற பெயர் சர்கார் திரைப்படத்தில் எதிர்மறையாக பயன்படுத்தப்பட்டிருப்பது பற்றி செய்தியாளர்கள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பினர்.
ஜெயலலிதா இல்லாததால், பலருக்கும் குளிர்விட்டுப் போய்விட்டது! சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதுபோல, சர்கார் திரைப்படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்தார் ஜெயக்குமார்!




