அழகு, திறமை இருந்தாலும் சினிமாவில் ஒரு பிரேக் கிடைக்க வேண்டும் என்பார்கள். அப்படி ஒரு பிரேக் வேண்டும் என்று ஒரு திருப்பு முனையான படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார் நடிகை சானியாதாரா. இவர் சுந்தரத் தெலுங்கு தேசத்திலிருந்து தமிழ்த்தேசம் வந்திருப்பவர். பிறந்தது ஹைதராபாத் என்றாலும் தமிழ் நன்றாகப் பேசுகிறார் இவருக்கு நல்ல திருப்பு முனை அமையாத காரணம், இவர் தமிழ் பேசக் கற்றுக் கொண்டது கூட காரணமாக இருக்குமோ? இவரிடம் நடிப்பாற்றல், நடனத் திறமை, அழகான தோற்றம், அணுக எளிமை அனைத்தும் இருக்கின்றன. குறையொன்றுமில்லைதான். கையில் சில படங்கள் இருக்கின்றன. ஆனாலும் நல்லதொரு திருப்பு முனைக்குக் காத்திருக்கிறார். யாரிந்த சானியா தாரா ? 2015-ல் வெளியான ‘ஜிகினா’ படத்தின் நாயகி, ‘வாராயோ வெண்ணிலாவே’ படத்தில் குட்டி கவிதையாக சின்ன பாத்திரத்திலும் கவர்ந்தவர். சுசீந்திரன் இயக்கிய ஜீவாவில் இன்னொரு நாயகியாக நடித்திருக்கிறார். இயற்பெயர் சானியா ஷேக், பிடித்த நடிகை நயன்தாரா என்பதாலோ என்னவோ எண் கணிதப்படி பெயரும் சானியாதாரா என்று அமைந்து விட்டது. சிறுவயதிலேயே சினிமா ஆர்வம். நடனம் கற்றார். சில விளம்பரப் படங்களில் நடித்தவருக்கு சினிமா வாய்ப்பு வரவே சினிமாப் பக்கம் வந்து விட்டார். சானியாதாராவுக்கு என்னென்ன பிடிக்கும்? “நடிகர்களில் சூர்யா நடிகைகளில் ஜோதிகா பிடிக்கும். இந்தியில் ஹிருத்திக், ஐஸ்வர்யாராய் பிடிக்கும். இயக்குநர்களில் ராஜமௌலி, மணிரத்னம், ஷங்கர் என் ஃ பேவரைட். டிவி பார்ப்பது நடனம் ஆடுவது மட்டும் அல்ல எனக்குச் சமைக்கவும் பிடிக்கும்.” என்கிற இவர் ஒரு சிக்கன் பிரியையாம். சிக்கன் உணவு வகை என்று வந்து விட்டால் சிக்கனம் காட்ட மாட்டாராம். ஒரு பிடி பிடிப்பாராம். அது மட்டுமல்ல சிக்கன் அயிட்டங்களைச் சமைத்தும்கூட அசத்துவாராம். சானியாவுக்கு எப்படிப்பட்ட படங்கள் பிடிக்கும்? “பேய்ப்படங்கள் திகிலூட்டும் திரில்லர் படங்கள் எனக்கு பிடிக்கும். ‘சந்திரமுகி’ ஜோதிகா என்னை கலங்க வைத்தவர்” என்கிறார். ‘சானியாதாரா’ என்கிற பெயரில் இவருக்குப் பிடித்த நயன்தாரா பெயர் இருப்பதில் மகிழ்கிறார். தான் நயன் தாராவில் பாதி என்று இந்த வகையிலாவது மகிழ முடியும் அல்லவா? அழகு, திறமை இருந்தாலும் சானியாவுக்கு ஏன் சரியான படம் வரவில்லை? “எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரவேண்டும் அது வந்துவிட்டால் தடுத்தாலும் நிற்காது. வருகிற ஏனோதானோ படங்களில் நடிக்கலாம், வருஷம் முழுக்க படப்பிடிப்பு போகலாம். அதில் எனக்கு விருப்பமில்லை. அவசரமில்லை; சரியான படத்திற்காக காத்திருக்கிறேன். இந்த சானியா’வின் திறமைக்குத் ‘தீனியா’ வரும் வாய்ப்புக்காக நல்ல பிரேக்கிற்காக காத்திருக்கிறேன்”. என்கிறார் நம்பிக்கையுடன்.
Less than 1 min.Read
சூர்யா, ஜோதிகாதான் எனக்கு பிடிக்கும்… சனியாதாரா
Hot this week
மதுரை
குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்
தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்
அரசியல்
திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!
தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....