விஜய் சேதுபதி படம் கொரிய மொழி படத்தின் ரீமேக் தான்: நளன் குமாரசாமி

சினி நியூஸ்

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ‘காதலும் கடந்து போகும்’ (Kadhalum Kadhandu Pogum) என்ற திரைப்படம், கொரிய மொழி திரைப்படமான “My Dear Desperado” என்ற திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் என்று  திரைபட தயாரிப்பாளர் நளன் குமாரசாமி உறுதி படுத்தியுள்ளார்.  இந்த திரைப்படம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “My Dear Desperado” கொரிய மொழி படம் மிகவும் பிடித்து விட்டதால்,  அதன் ரீமேக் உரிமையை 40 லட்ச ரூபாய்க்கு பெற்று தமிழில் தயாரிக்க உள்ளோம். இந்த படத்தில்  சமுத்திரகனி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடக்க உள்ளார். சிவி குமார் மற்றும் கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்த படம் வரும் பிப்ரவரி 12-ம தேதி திரைக்கு வர உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.