ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளர் சுட்டு கொலை

உலகம்

ஆப்கானிஸ்தானின் நான்கர்ஹர் மாகாணத்தில் காரில் சென்று கொண்டிருந்த பத்திரிக்கையாளர் மொஹமத் ஜுபைர் கஹக்சர் (Mohammad Zubair Khaksar) அடையாளம் தெரியான மர்ம நபர் சுட்டு கொலை செய்துள்ளதார்.

 

கஹக்சர்  சிறந்த கவிஞர் மட்டுமல்லாது ஆப்கானிஸ்தான் அரசால் நடத்தப்படும் தேசிய ரேடியோ மற்றும் தொலைக்காட்சி நெட்வொர்க்கில் பத்திரிக்கையாளராக பணியாற்றி வருகிறார். இந்த சம்பவத்திற்கு ஆப்கானிஸ்தானின் நான்கர்ஹர் மாகாண கவர்னர் கடும் கண்டம் தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூர் அதிகாரிகள் இந்த கொலை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில், காபூலில்  தனியார் தொலைகாட்சி சேனல் ஊழியர்கள் பயணம் செய்த மினி பஸ் மீது தாலிபான்கள் தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தி, அதில் ஏழு பேர் பலியானதோடு, 24 பேர்  காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.