‘பிரியாணி’யில் கார்த்தியுடன் நடித்த நடிகை ஹானி மரணம்

Haaniவெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்த பிரியாணி படத்தில் சிறிய வேடத்தில் தோன்றியவர் ஹானி. அந்தப் படத்தில் ஓரு ஷோ ரூம் திறப்பு விழா காட்சியில் ஹானி நடித்திருந்தார். ஷோ ரூம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் ஹானியை கார்த்தி முதல் சந்திப்பிலேயே காதல் வலையில் வீழ்த்துவார். இருவரும் தொலைபேசி எண்களை பரிமாறிக் கொள்வர். அஜீத்தின் ஆரம்பம் படத்திலும் ஹானி சிறிய வேடத்தில் நடித்துள்ளார். ஹானிக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டு, பல மாதங்களாக அதற்கு அவர் சிகிச்சை எடுத்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். மிக இளம் வயதில் ஏற்பட்ட ஹானியின் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.