சித்ராவை மகள் போல் நினைத்தோம்… ஹேமந்தின் பெற்றோர் கதறல்…

Published:

chitra

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா நேற்று தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடன், அவரின் வருங்கால கணவர் ஹேமந்தும் தங்கியிருந்த விவகாரம் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த சில தினங்களாக சித்ரா மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சித்ராவின் மரணத்தை தொடர்ந்து அவருடன் பழகியவர்கள், உடன் நடித்தவர்கள், தோழிகள் என பலரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சித்ராவின் தாய் ‘ என் மகளின் மரணத்திற்கு ஹேமந்தே காரணம், அவன்தான் என் மகளை கொன்று விட்டான். என் மகள் கோழை அல்ல. தனியாக எங்கு செல்வாள். தனியாக கார் ஓட்டி செல்வாள். அவளை தைரியமாக வளர்த்தேன். அவனை சும்மா விடக்கூடாது’ என கதறி அழுதார்.

ஆனால், அவரின் குற்றச்சாட்டை ஹேமந்தின் பெற்றோர் மறுத்துள்ளனர். சித்ராவின் தற்கொலைக்கு என் மகனே காரணம் என கூறுவது சரியில்லை. அவன் மிகவும் நல்லவன். சித்ராவை சொந்த மகள் போலத்தான் கருதினோம்’ என தெரிவித்துள்ளனர்.

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img