
விருதுநகரில் குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து-20 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீயில் எரிந்து சேதம்! தீவிபத்து குறித்து அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்தனர்.
விருதுநகர் மேலத்தெரு பேட்டையில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 200க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன.
இந்த குடியிருப்பு பகுதியில் அதிகாலையில் ஒரு வீட்டீல் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அந்த தீ அருகிலிருந்த வீடுகளுக்கும் பரவி பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அருகிலிருந்தவர்கள் உடனடியாக காவல் துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் அப்பகுதியில் அடுத்தடுத்து இருந்த குடிசை வீடுகள் உள்ளிட்ட 20 வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமானது. தீ விபத்து ஏற்பட்ட உடன் குடியிருப்புகளில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்து வீட்டை விட்டு வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது
இருப்பினும் குடியிருப்புகளில் உள்ளே எவரேனும் சிக்கி இருக்கிறார்களா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்தனர்.