sabarimala panguni uthiram - 2026

சபரிமலை; பங்குனி உத்திரம் ஆராட்டு விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஆன்மிகச் செய்திகள் இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
sabarimala panguni uthiram - 2026

பங்குனி உத்திர திருவிழா மற்றும் சித்திரை விஷுவுக்காக சபரிமலை நடை செவ்வாய் மாலை திறக்கப்பட்டு இன்று ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்து நெய்யபிஷேகம் செய்தனர்.

உலகப் புகழ் பெற்ற சுவாமியாக விளங்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி அருண் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மாலை 6:30 மணிக்கு சன்னிதானம் முன்புறமுள்ள மண்டபத்தில் கொடி பட்டத்துக்கான பூஜைகளை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் நடத்தினார். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் மஹா கணபதி ஹோமம் அபிஷேகம், நெய்யபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. காலை 9:45 முதல் 10:45 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது.

புதிய கொடி பட்டம் சபரிமலையில் உள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயிலில் திருஉற்சவத்தின் கொடியேற்ற விழாவிற்கு கொடிபட்டம்
கொல்லம் சக்திகுளங்கரா ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து நேற்று புறப்பட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தி அருண் நம்பூதிரியிடம் வழங்கப்பட்டு பூஜைகள் செய்து இன்று தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா நடைபெறும். வியாழன் முதல் ஒன்பதாம் நாள் விழாவான ஏப்.10 வரை மதியம் உற்ஸவ பலி நடைபெறும். ஏப்.10 இரவு சரங்குத்தியில் பள்ளி வேட்டையும், ஏப். 11மதியம் பம்பையில் ஆராட்டும் நடைபெறும். அன்று இரவு கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும்.

ஏப். 12 முதல் சித்திரை விசு பூஜைகள் நடைபெறும். ஏப். 14 – காலையில் சித்திரை விஷுவையொட்டி கனி காணும் நிகழ்ச்சியும், பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்குதலும் நடைபெறுகிறது. ஏப்.18 வரை பூஜைகள் நடைபெற்று அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

சபரிமலை வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கேரளா அரசு திருவாங்கூர் தேவசம் போர்டு செய்துள்ளதுகேரளாவின் முக்கிய நகரங்களில் இருந்து பம்பைக்கு ஏப்ரல் 18 வரை தினசரி சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் பக்தர்கள் வாகனங்கள் பம்பை வரை அனுமதிக்கப்படும்.

பக்தர்களுக்கு பம்பை மற்றும் சபரிமலையில் திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் இலவச அன்னதானம் வழங்கப்படும். தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் குடிநீர் வசதிகள் உட்பட அடிப்படை வசதிகள் அனைத்தும் பக்தர்களுக்கு தேவசம் போர்டு சார்பில் செய்து தரப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.