
- திருமலையில் சன்னிதி இடையர்கள் (Gollalu) எனப்படும் யாதவ குலத்தவருக்கு வம்ச பாரம்பரிய உரிமை!
- ஆந்திர பிரதேஷ் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்த திருமலா திருப்பதி தேவஸ்தானம் தர்மகர்த்தா மண்டலி.
திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தில் பல்லாண்டு காலமாக பணியாற்றி வரும் சந்நிதி இடையர் குலத்தவர்களின் வம்ச பாரம்பரியமான உரிமைகளை திரும்பத் தர வேண்டும் என்று தர்மகர்த்தாக்கள் மண்டலி அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்தது.
தினமும் திருமலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி பிரதான ஆலய துவாரங்களைத் திறக்கும் உரிமை சன்னிதி கொல்லர்கள் எனப்படும் யாதவர்களுக்கு மட்டுமே உள்ளது. இந்த சம்பிரதாயத்தை சில ஆண்டுகள் முன் கடந்த அரசு தடை செய்தது பெரிய அளவில் போராட்டத்திற்கும் பரபரப்புக்கும் இடமளித்தது.

ஆலயங்களில் பணி செய்துவரும் அர்ச்சகர்களுக்கு வம்ச பாரம்பரிய உரிமைகளை ஏற்படுத்தித் தர மாநில அரசு அண்மையில் உத்தரவு இட்டது. இப்பின்னணியில் சந்நிதி இடையர்களான யாதவர்களுக்கும் இந்த உரிமைகளை மீட்டுத் தரவேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தது.
இதன் மீது தர்மகர்த்தா மண்டலி அண்மையில் கூட்டம் கூடி விவாதித்து இதுகுறித்து ஆமோதித்தது. இதே விஷயத்தை அரசாங்கத்திற்கும் பரிந்துரை செய்தது. அதற்கு ஆதரவாக சட்டத்தில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்று கோரினார்கள்.

சன்னிதி கொல்லர்கள் என்றழைக்கப்படும் பெயரை சன்னிதி யாதவர்களாக மாற்ற வேண்டும் என்று கூட அதில் கேட்டுக் கொண்டுள்ளார்கள். அதற்கு அரசாங்கம். சம்மதம் அளித்துள்ளதாக தெரிவித்தது.
இதை அடுத்து, நெல்லூர் மாவட்டம் காவலியில் உள்ள யாதவ சங்கத்தினரின் தலைமையில் முதலமைச்சர் ஒய்எஸ் ஜகன்மோகன் ரெட்டி படத்திற்கு பால் அபிஷேகம் செய்தார்கள்.
இந்த நேரத்தில் யாதவர் சங்க தலைவர்கள் பேசுகையில் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் யாதவர்களுக்கு பரம்பரை பரம்பரையாக உள்ள கௌரவத்தை மீண்டும் ஏற்படுத்தித் தந்த மாநில மக்களின் தலைவரான ஒய்எஸ் ஜகன்மோகன் ரெட்டிக்கு யாதவ சமாஜம் நன்றி தெரிவிக்க கடன்பட்டுள்ளது என்று பேசினர்.

முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வரலாற்றுப் பெருமை மிக்க முடிவை எடுத்துள்ளார் என்று என்றும் யாதவ சமூகத்தினரின் இன கௌரவத்தை காப்பாற்றினார் என்றும் தாம் நினைப்பதாக கூறினார்கள்.
திருமலை ஆலயக் கதவுகளை திறப்பதற்கு சன்னிதி யாதவர்களுக்கு மீண்டும் வாரிசு உரிமைகளை ஏற்படுத்தி தந்த தம் பிரியமான முதலமைச்சர் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.
திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் மாதவனின் முதல் தரிசனம் யாதவர்களுக்கு என்பது பெரியவர்கள் ஏற்படுத்திய பல்லாண்டுகளாக இருக்கும் நிர்ணயம்.
திருமலை ஆலயக் கதவுகளை திறப்பதற்கு சன்னிதி கொல்லர்களுக்கு மீண்டும் வாரிசு உரிமையை ஏற்படுத்தி கொடுத்ததைப் பாராட்டி முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்கள்.
கலியுக தெய்வம் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலய துவாரங்களைத் திறந்து கையில் தீவட்டி பிடித்து
முதல் தரிசன பாக்கியம் சந்நிதி இடையர் வம்சத்திற்கு அந்த இறைவனால் ஏற்படுத்திக் கொடுத்த வரம் ஆகும். இந்த வரத்தை கடந்த அரசாங்கம் நீக்கிவிட்டது.

கடந்த 4 ஆண்டுகளாக சந்நிதி வெங்கட்ராமய்யா வாரிசுகளின் போராட்டத்தையும் யாதவர்களின் மன நிலையையும் கௌரவித்த ஜகன் மோகன் ரெட்டி அவர்கள் பாதயாத்திரை செய்த போது கொடுத்த வாக்கின்படி திருமலையில் உள்ள யாதவ வம்ச பாரம்பரியத்தை தொடரும்படி செய்வேன் என்று கொடுத்த வாக்கை நிறைவேற்றி விட்டார்.
சந்நிதி யாதவர்களுக்கு வம்ச பரம்பரை உரிமைகளை மீண்டும் அளித்துள்ளார். யாதவர்களின் கவுரவத்தை காப்பாற்றிவிட்டார் என்று நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்கள்.
அதேபோல் இந்த தீர்மானத்திற்கு உதவிய எம்எல்ஏ ஸ்ரீராமிரெட்டி பிரதாப் குமார் ரெட்டிக்கும் நன்றி தெரிவித்தார்கள். வரலாற்றை காப்பாற்றி வரலாற்றுப் பெருமைமிக்க நிர்ணயத்தை எடுத்த மாநில மக்களின் ஆசைஜோதி இளைஞர் தலைவர் முக்கிய மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு பாராட்டு தெரிவித்தார்கள்.