கொரோனா பாதிப்பு: சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர் அறை மூடல்!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
Secretariat
Secretariat
  • செய்தி சேகரிப்பில் ஈடுபடும் நண்பர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
  • கொரோனா பரவிவருவதால், சென்னையில் தலைமை செயலகத்தில் செயல்பட்டு வந்த பத்திரிகையாளர் அறையும் மூடப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.மேலும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து தலைமைச்செயலக பத்திரிகையாளர் அறை மூடப்பட்டது

 சென்னை தலைமை செயலகத்தில் கடந்த 8-ஆம் தேதி நிலவரப்படி 44 ஊழியர்களுக்கு கொரோனா தோற்று ஏற்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து 250 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 138 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானதாம். அவர்கள் மருத்துவமனைக்கு போக விரும்பாமல் வீட்டு தனிமையில் இருக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில்  சென்னை தலைமை செயலகத்தில் திட்டமிடப்பட்ட ஒரு தடுப்பு நடவடிக்கையாக அனைத்து அலுவலகங்களும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

தொடர்ந்து இன்று,  சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறை மூடப்பட்டது. தலைமைச் செயலகத்தில் பணியில் இருந்த பத்திரிகையாளர் சிலருக்கு தொற்று உறுதியானதால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் அறை மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.