December 7, 2025, 3:06 AM
24.5 C
Chennai

சுஷாந்தின் மரணம் தற்கொலை அல்ல.. சிபிஐ விசாரணை தேவை: சுஷாந்தின் தாய்மாமா!

susanth sing

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், முன்னாள் கேப்டன் டோனியின் வாழ்க்கை வரலாற்று படமான “M.S. Dhoni: The Untold Story” படத்தில் நடித்து பிரபலமடைந்தவர். இதனால் அவர் அனைத்து மொழிகளிலும் அறியப்பட்ட நடிகரானார். இந்நிலையில் அவர் மும்பை பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு வயது 34 ஆகிறது.

அவரது தீடீர் மறைவு பாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவரது தாய்வழி மாமா சுஷாந்த் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பாட்னாவில் உள்ள சுஷாந்தின் வீட்டில் அவரது தாய்வழி மாமா பேட்டி அளித்தபோது, சுஷாந்த் தற்கொலை செய்ய வாய்ப்பே இல்லை. அவரது மரணத்தின் பின்னணியில் சதி இருப்பதுபோல் தெரிகிறது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தவேண்டும் என்று குற்றமச்சாட்டியுள்ளார்.

மேலும் ஜன் அதிகார் கட்சி தலைவர் பப்பு யாதவும் சுஷாந்த் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். சுஷாந்த் கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சுஷாந்த் ரெய்ஹியா சக்ரவர்த்தி என்ற கேர்ள்பிரண்டுடன் நெருக்கமாக பழகி வந்தார், இருவரும் பல இடங்களுக்கு ரகசியாமாக சுற்றி வந்தனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணைய தளத்தில் பரவி வருகிறது.

இந்நிலையில் இந்த வருட நவம்பரில் சுசாந்த் சிங் திருமணம் செய்ய இருந்ததாக அவருடைய உறவினர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்த வருட நவம்பரில் சுசாந்த் சிங் திருமணம் செய்ய இருந்தார். திருமணத்தை நடத்த அவருடைய குடும்பம் தயாராக இருந்தது. விரைவில் அனைவரும் மும்பைக்கு வந்து திருமண ஏற்பாடுகளைச் செய்ய இருந்தோம்.

மும்பையில் நடைபெறவிருந்த அந்தத் திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டும் கலந்துகொள்வதாக இருந்தது என்றார். எனினும் சுசாந்த் சிங் திருமணம் செய்ய இருந்த பெண்ணின் பெயரை அவர் தெரிவிக்கவில்லை. அவர் காதலிப்பதாக பரவிய பெந்தான அது எனவும் தெரியவில்லை

பாட்னாவில் பிறந்த சுஷாந்த் நடிப்பதற்காக மும்பை வந்து தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தார். இவரது தங்கை மித்து சிங் மாநில அளவிலான கிரிக்கெட் வீரர் ஆவார்.

சுஷாந்த் மரணம் குறித்து தெரிவித்துள்ள நடிகர் அக்‌ஷய் குமார்.’இது உண்மையிலேயே என்னை அதிர்ச்சியிலும் பேச்சில்லாமலும் செய்திருக்கிறது. அவர் நடித்த சிச்சோர் படத்தை பார்த்து அந்த பட தயாரிப்பாளரிடம் சுஷாந்த் நடிப்பு பற்றறி பாராட்டினேன். அவரைப் போன்ற திறமையான நடிகருடன் நான் நடிக்க விரும்புவதாக விருப்பம்தெரிவித் தேன். இந்த இழப்பை தாங்க அவரது குடும்பத்தினருக்கு கடவுள் வலிமை தரட்டும்’ என் தெரிவித்திருக்கிறார்.

View this post on Instagram

Sushant ?

A post shared by KIARA (@kiaraaliaadvani) on

View this post on Instagram

Hare Ram. Heartbroken.

A post shared by R. Madhavan (@actormaddy) on

View this post on Instagram

Woke up today to the saddest most unthinkable news … I really loved my interactions with sushant , whenever I would see him out I would Always corner him and keep asking him things about performance, life and science , he was so bright , lived life to the absolute fullest and generous , so kind … it’s a huge huge loss for everyone that he ever came in contact with and it fills me with deep sadness to know I will never see or be able to talk to him again … this is so so awful and I’m genuinely disturbed by this , I very rarely do this but after meeting him out I remember I sent him some books and films and he would watch and read and we would talk more , I have no words only sadness .. RIP sushant we all will always love you

A post shared by Harsh Varrdhan Kapoor (@harshvarrdhankapoor) on

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories