அண்ணாத்த – Annaatthe

annathe nayan rajini
annathe nayan rajini

சூப்பர் ஸ்டார் – சிறுத்தை சிவா காம்பினேஷனில் ஆட்சி மாற்றத்துக்குப் பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தீபாவளிக்கு எந்த போட்டியுமில்லாமல் அல்லது போட்டியை ஓரங்கட்டி எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் படம் அண்ணாத்த ‌‌. ரஜினி – நயன்தாரா ஜோடி சேர்ந்த தைரியத்தில் அதரப்பழசான அண்ணன் தங்கை பாச டெம்ப்ளேட் கதைக்கு அதை விட அதரப்பழசான திரைக்கதையுடன் அண்ணாத்த யை களமிறக்கியிருக்கிறார் இயக்குனர் சிறுத்தை சிவா …

 71 வயதிலும் இன்றைய நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் படி துடிப்பாக இருக்கிறார் ரஜினி. பச்சக்கிளி என்று அவர்  ‌‌‌சூரியை அழைப்பதே தனி ஸ்டைல் . ஸ்டேஷனில் பிரகாஸ்ராஜை கலாய்ப்பது , முறைப்பெண்கள் மீனா , குஷ்பு வை சமாளிப்பதென என எல்லாமே ரஜினி ஸ்டைல் கலகலப்பு . வக்கீல் நயன்தாரா ரஜினி யை பார்த்தவுடனே எந்த வாதமும் பண்ணாமல் விழுந்து விடுகிறார் . கீர்த்தி சுரேஷ்க்கு இயக்குனர் இது சன் டிவி யின் சீரியல்  என்று சொல்லிவிட்டார் போல படம் முழுவதும் ஒரே மாதிரியான சோக முகபாவம் . வில்லன்கள் பெரிய எதிர்ப்பு இல்லாமல் சரணடைவது சறுக்கல் …

இமானின் இசையில் சாரக்காற்று பாடல் வருடுகிறது மற்றபடி பிண்ணனி இசை  வெறும் இரைச்சல் . ரஜினி யின் எனர்ஜி , சன் மார்க்கெட்டிங் , மெகா ரிலீஸ் எல்லாமே ப்ளஸ் மற்றவை எல்லாம் மைனஸ் தான் . மாஸ் ஹீரோ படத்தில் கதை லாஜிக் எல்லாம் பெரிதாக யோசிக்க வேண்டாம் ஆனால் திரைக்கதை என்கிற வஸ்துவையும் சிவா தீபாவளி தள்ளுபடியில் விட்டது தான் வேதனை …

அண்ணாத்த கிராமத்தில் இருக்கும் வரை அப்படியிப்படி நம்மை சமாளித்து விடுகிறார் ஆனால் கொல்கத்தா போனவுடன் வில்லன்களோடு சேர்ந்த நம்மையும் வதம் செய்கிறார் . தீபாவளி விடுமுறையாலும் , பெரிய போட்டி இல்லாததாலும் முதல் வாரம்  அண்ணாத்த வசூல் செய்வார் . மற்றபடி சீரியலை மிஞ்சும் ஓவர் செண்டிமென்ட் , ஒட்டாத ஆக்சன் , திருப்பாச்சி கதை , வேதாளம் காட்சிகள் என கம்பீரமாக நிற்காமல் அந்தரத்தில் தொங்குகிறார் இந்த அண்ணாத்த …

ரேட்டிங்க். : 2* 

  • விமர்சனம்: அனந்து

வீடியோ விமர்சனத்தை கீழே காணவும் …

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories