October 23, 2021, 2:03 am
More

  ARTICLE - SECTIONS

  சூப்பர் டீலக்ஸ் – SUPER DELUX – சுகானுபவம்

  super deluxe first look samantha akkineni vijay sethupathi - 1

  ஆரண்ய காண்டம் தந்த தியாகராஜன் குமாரராஜா வின் அடுத்த படத்துக்கான எட்டு வருட காத்திருப்புக்கு சரியான தீனி சூப்பர் டீலக்ஸ் . ஆனால் நிச்சயம் ஆரண்ய காண்டம் மாதிரி கேங்ஸ்டர் படத்தை எதிர்பார்த்தால் அது ஏமாற்றமே . இதில் எமோஷனல் டிராமா , ஃபேண்டஸி , பிளாக் ஹியூமர் , த்ரில் என அனைத்தையும் சரி விகிதத்தில் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் டி.கே…

  கணவன் முகிலுக்கு ( ஃபர்ஹத் பாசில் ) தெரியாமல் பழைய காதலனுடன் மேட்டர் செய்யும் பெண் வேம்பு ( சமந்தா ) , நண்பர்களுடன் பார்க்கும் மேட்டர் சிடி யில் தன் அம்மாவையே ( ரம்யா கிருஷ்ணன் ) பார்த்து அதிர்ச்சியாகும் சிறுவன் , பல வருடங்கள் கழித்து திருநங்கையாக வந்து குடும்பத்துக்கு அதிர்ச்சி கொடுக்கும் கணவன் ஷில்பா ( விஜய் சேதுபதி ) கடவுளின் வலது கரமாக தன்னை நினைத்துக்கொண்டு வியாதிகளிலிருந்து மக்களை காப்பாற்ற பிராத்தனை செய்யும் அற்புதம்
  ( மிஷ்கின் ) இப்படி நால்வரின் சம்பவங்களை நான் லீனியரில் சொல்வதே சூப்பர் டீலக்ஸ் …

  மாஸ் ஹீரோ , ஹீரோயினாக இருந்தாலும் இது போன்ற கேரக்டர்களில் இமேஜ் பார்க்காமல் விஜய் சேதுபதி , சமந்தா வுக்கு வாழ்த்துக்கள் .

  நான்கில் விஜய் சேதுபதி யின் எபிசோட் அதிகம் கவர்கிறது . குறிப்பாக அந்த குட்டிப்பையன் ராசுக்குட்டி அற்புதம் . அவனை தொலைத்து விட்டு விஜய் சேதுபதி படும் பாடு ஹைலைட் . சமந்தா ஏதோ போரடித்தது படத்துக்கு போனேன் என்பது போல பழைய காதலனுடன் முதல் சந்திப்பிலேயே மேட்டர் செய்வது நெருடல் . அதனால் தான் இன்ஸ்பெக்டர் மெர்லின் ( பகவதி பெருமாள் ) ஷில்பாவுக்கு தொல்லை கொடுக்கும் போது வரும் வலி இவருக்கு கொடுக்கும் போது வரவில்லை . சமந்தா – ஃபர்ஹத் சண்டை போட்டுக்கொள்வது கூட மெலோட்ராமா . ஃபர்ஹத் நடிப்புக்காகக இந்த சீன்களை ரசிக்க முடிகிறது …

  பிரார்த்தனை செய்யும் மிஷ்கினை விட அவர் அசிஸ்டன்ட் அதிகம் கவர்கிறார். நான்கு பசங்களில் காஜி யாக வருபவர் கவனிக்க வைக்கிறார் . தேவிடியா என்று தன்னை திட்டின மகனை காப்பாற்ற டாக்டரிடம் போராடும் ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு நெகிழ்ச்சி . முதலில் ரசிக்க வைக்கும் நான்கு பசங்களின் காமெடி சீன்கள் ஏலியன் என்ட்ரிக்கு பிறகு போரடிக்கிறது . அடிச்சு மூஞ்சிய உடைக்கணும் ன்ற அளவுக்கு வெறுப்பேற்றும் கேரக்டரில் வெற்றி பெறுகிறார் பகவதி . முக்கியமான இந்த கேரக்டருக்கு இன்னும் வெயிட்டான ஆளை போட்ருக்கலாமோ எனவும் தோன்றுகிறது …

  ஷில்பா – அற்புதம் சம்பந்தப்பட்ட ஸீன் அற்புதம் . அது கல்லு தானே சாமி என்பது டயலாக்காக ரசிக்க வைத்தாலும் கடவுள் பற்றிய சிந்தனை இயக்குனருக்கு மேம்போக்காகவே இருக்கிறது . ஆரண்ய காண்டம் போலவே முதல் சீனை மீட்டரில் இருந்து ஆரம்பிக்கும் இயக்குனர் கொலை நடந்த வீட்டுக்குள் வரும் கெஸ்ட்டாக வரும் குடும்பம் , லைவாக பிரச்னையை எடுத்து முகநூலில் போடும் கவுன்சிலர் , அசைன்மெண்ட் கொடுக்கும் பாய் , திருநங்கையாக மாறிய அப்பாவிடம் அப்பாவித்தனமாக கேள்விகள் கேட்கும் ராசுக்குட்டி என சின்ன சின்ன கேரக்டர்கள் வாயிலாக கூட நம்மை அவர் உலகத்துக்குள் அழைத்து சென்று ஐக்கியமாக்குறார் …

  வினோத் , நீரவ் ஷா வின் ஒளிப்பதிவு , யுவனின் பின்னணி இசை எல்லாமே கண்ணையோ , காதையோ உறுத்தாமல் தேவையான அளவுக்கு இயக்குனருக்கு ஸ்பேஸ் கொடுத்து அடக்கி வாசித்திருப்பது பலம் . இண்டெர்வெல்லுக்கு பிறகு படத்தின் மேல் சுவாரசியம் குறைவதற்கு காரணம் நீளம் . ஃப்ரிட்ஜுக்குள் பிணம் இருப்பது தெரியாமல் ” நான் வெஜ் வெக்கலையே ” என்று கேட்கும் பிராமணர் , தமிழனா இருந்த ஷேர் பண்ணுன்னு சொல்லும் கவுன்சிலரின் அசிஸ்டன்ட் , ஸ்டார் ஆவதற்கு முன்னமே சமூக பிரச்சனைகளை பன்ச் டயலாக் பேசி பயிற்சி செய்யும் ஃபர்ஹத் பாசில் , நாடகத்தனமான பிரார்த்தனையை காறித்துப்பும் ரம்யா கிருஷ்ணன் என செலெக்டிவாக இல்லாமல் எல்லாவற்றையும் கேரக்டர்கள் மூலமாக இயக்குனர் ஓட்டியிருப்பது மிக சிறப்பு . சூப்பர் டீலக்ஸ் எனும்
  சுகானுபவத்தில் க்ளைமேக்சில் வந்து மனுஷ்யபுத்திரன் தத்துவம் பேசுவது திருஷ்டிப்பொட்டு …

  ரேட்டிங் : 3.75 * / 5 *

  ஸ்கோர் கார்ட் : 48

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,137FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,581FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-