விஜய் சேதுபதியை கைது செய்க! திருநங்கையர் கோரிக்கை!

Reporters Diary சினி நியூஸ் சினிமா புகார் பெட்டி

maxresdefault 23 - 2026

விஜய் சேதுபதியை கைது செய்ய வேண்டும் என்று, திருநங்கையர் வலியுறுத்தியுள்ளனர்.

சூப்பர் டீலக்ஸ் என்ற படம் தற்போது வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் திருநங்கையாக விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

பலரும் அவரது நடிப்பைப் பாராட்டும் அதே நேரத்தில், இந்தப் படத்தில் திருநங்கைகளை கொச்சைப் படுத்தி நடித்த விஜய் சேதுபதியைக் கைது செய்ய வேண்டும் என திருநங்கைகள் வற்புறுத்தி வருகின்றனர்.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்துள்ள விஜய் சேதுபதி புடவை உடுத்திக் கொண்டு வீட்டுக்குச் செல்வது, குழந்தைகளைக் கடத்துவது போன்ற குற்றச் செயல்கள் அதிகம் புரியும் வகையில் அமைந்த காட்சிகள் திருநங்கைகளின் மனதை புண்படுத்துவதாகவும், சமூகத்தில் திருநங்கையர் மீதான பார்வையை மோசமாக சித்திரிப்பதாகவும் கூறி, மிருணாளினி, கோவை சில்கி பிரேமா, கல்கி சுப்ரமணியம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், விஜய் சேதுபதி கைது செய்யப் பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.