தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் திரைப்பட அரங்கம் முன்பு ஊழியர் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நபர் நானி காடு என்ற திரைப்படத்தில் பணியாற்றிய ஊழியர் என கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையினர் அவரை உடனடியாக மீட்டு காவல் வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஊழியரின் திடீர் செயலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தற்கொலைக்கு முயன்ற வீடியோ தற்போது, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.