வாட்ஸ் அப்பில் ‘ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்’… புதிய நுட்பம் வருகிறது!

தொழில்நுட்பம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

whatsapp fingerprint - 2026

வாட்ஸ் அப் பயன் படுத்துபவர்களின் பாதுகாப்பு அம்சத்தை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு நடைமுறையை பலப்படுத்தும்  விதமாக பிங்கர் பிரிண்ட் சென்சார் முறையை வாட்சப் நிறுவனம் சோதனை முறையில் கொண்டு வருகிறது.

உலகம் முழுவதும் வாட்சப்பை 1.3 பில்லியன் பேர் பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்தும் நோக்கில் தங்கள் விரல் ரேகையை வைத்தால் மட்டுமே வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியும் என்ற விதத்தில் புதிய அப்டேட்டை கொண்டு வருகிறது வாட்சப் நிறுவனம். இது பிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ள குறிப்பிட்ட மாடல் செல்போன்களில் மட்டுமே செல்லுபடியாகும்!

தற்போது வாட்ஸ் அப் பீட்டா வெர்ஷன் 2.19.83 சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு முறை விரல் ரேகையை பயன்படுத்தினால் மட்டும் போதும் வாட்சப் எவ்வளவு நேரம் திறந்திருக்க வேண்டும் உள்ளிட்ட அத்தனை வசதிகளும் அதன் செட்டிங்சில் இடம் பெற்றிருக்கும். அதற்கு, Settings > privacy > use finger print என அமைத்துக் கொள்ள வேண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.