முள்ளங்கி – சீரக சாதம்
தேவையான பொருட்கள்:
முள்ளங்கி – ஒன்று (தோல் சீவி, சதுர துண்டுகளாக்கவும்)
சாதம் – ஒரு கப்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பூண்டு – 5 பல் (வட்டமாக நறுக்கவும்) மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு
எண்ணெய், நெய் – தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
முள்ளங்கியுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்துத் தனியாக வேகவைத்து எடுக்கவும். சாதத்தை உதிர் உதிராக வேகவிட்டு ஆறவைக்கவும். வாணலியில் நெய் – எண்ணெய் ஊற்றி சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் பூண்டு, முள்ளங்கி, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். பிறகு சாதம், மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.