பீர்க்கங்காய் ரைஸ்
தேவையானவை:
உதிர் உதிராக வடித்த பச்சரிசி சாதம் – ஒரு கப்,
நறுக்கிய பீர்க்கங்காய் – 2 கப்,
வெங்காயம், தக்காளி – தலா ஒன்று (நறுக்கவும்),
இஞ்சி, கொத்தமல்லி, பூண்டு, பச்சை மிளகாயை சிறிதளவு எடுத்து அரைத்த விழுது – 2 டீஸ்பூன்,
சீரகம், வறுத்த முந்திரி – சிறிதளவு.
நெய், எண்ணெய் – தலா 25 கிராம்,
கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு – சிறிதளவு.
செய்முறை:
எண்ணெய் – நெய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து சூடாக்கி, சீரகம் தாளித்து, இஞ்சி – கொத்தமல்லி – பூண்டு – பச்சை மிளகாய் விழுது சேர்த்துக் கிளறி… இதனுடன் தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு, நறுக்கிய பீர்க்கங்காய் சேர்த்து வதக்கி… உப்பு, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் போட்டு, உதிராக வடித்த சாதமும் சேர்த்து நன்கு புரட்டி, ஒரு நிமிடம் வைத்து இறக்கி… வறுத்த முந்திரியை சேர்த்துப் பரிமாறவும்.