முள்ளங்கி பராத்தா
தேவையானவை:
துருவிப் பிழிந்த முள்ளங்கி – அரை கப், கோதுமை மாவு – ஒரு கப்,
பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்),
நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு,
சீரகம் – ஒரு சிட்டிகை,
கடலை மாவு – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
நெய் – தேவையான அளவு,
உப்பு – சிறிதளவு.
செய்முறை:
துருவிப் பிழிந்த முள்ளங்கியுடன், நெய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து நன்கு பிசைந்து பராத்தாவாக திரட்டவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி, பராத்தாவைப் போட்டு, இருபுறமும் நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
இதற்குத் தொட்டுக்கொள்ள தயிர் போதும்.