பல்லி கடித்து விட்டால்…
உடனே கொஞ்சம் பனை வெல்லத்தைத் தின்றால் நஞ்சு முறியும் கடிபட்ட இடத்தில் மஞ்சளை அரைத்துத் தடவ வேண்டும்.
பலமான இருதயம் பெற…
வெள்ளைத் தாமரைப் பூவின் இதழ்களை மாத்திரம் கஷாயம் வைத்து வடிகட்டி, பாலுடன் கலந்து காலையும் மாலையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இதயம் பலப்படும்.
அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படுகிறதா? விளாம்பழம் சாப்பிட்டு வர குணம் தெரியும். வெயில் காலத்தில் அடிக்கடி தாகம் எடுத்தால்கூட இதை சாப்பிட்டுக் குணம் அடையலாம்.
கேழ்வரகை மேற்புறம் கருகும் வண்ணம் வறுத்து மாவரைத்து பானம் தயாரித்துப் பருகலாம். இதிலுள்ள தாமிரச்சத்து இருதயத்தை பலப்படுத்தும்.
நெல்லிக்காய்ச் சாற்றில் கொஞ்சம் பசு நெய்யைக் கலந்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வாருங்கள். இருதயம் பலமாவதுடன் உடலும் பலப்படும். ஒரு ஸ்பூன் துளசி சாறுடன் சம அளவு தேன் கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட இருதயம் பலப்படும்.
இரவில் பால் சாப்பிடும் பொழுது ஒரு சிட்டிகை கடுக்காய்ப் பொடியைக் கலக்கிச் சாப்பிட இருதயம் பலப்படும். இருதய சம்பந்தமான எந்த நோயும் வராது.
இரவு படுக்கைக்கு முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் தேனையும் எலுமிச்சம் பழச் சாற்றையும் கலந்து அருந்தி வர இருதயத்தின் பலவீனமும் இரத்தக்குழல் பலகீனமும் குணமாகும்.
பசி எடுக்க…
பசியின்மை என்பது ஒரு பிணி. அதைப் போக்க மிளகு கஷாயம் சாப்பிடலாம். ஒரு ஸ்பூன் மிளகை எடுத்து அதை லேசாக வறுத்து தட்டிப் போட்டு கஷாயம் வைத்து வடிகட்டி அதில் சிறிது தேளையும் சேர்த்து சாப்பிட நன்றாக பசி எடுக்கும்.
இரண்டு மூன்று ஆரஞ்சுப் பழங்களைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். உரித்த தோலை சிறு துண்டுகளாக நறுக்கி நீரில் ஊறவைத்து வடிகட்டி அந்த நீரையும் பழச்சாற்றுடன் கலந்து கொடுக்க நல்ல ஜீரணசக்தி ஏற்படும்.
சீரகத்தை லேசாக வறுத்துப் பொடி செய்து பனைவெல்லத்துடன் சாப்பிட நல்ல பசி எடுக்கும்.
பசியும் ருசியும் இல்லையா?
புதினாக் கீரையை சுத்தம் செய்து இலேசாக வதக்கி, துவையல் செய்து. சுடச்சுட சாதத்தில் போட்டு
சாப்பிட சரியாகி விடும்.
பசியிருந்தும் ரூசியில்லாமல் இருந்தால், சிறிது இஞ்சி; கொஞ்சம் சீரகம் இரண்டையும் அரைத்து சுடச்சுட சாதத்தில் போட்டுப் பிசைந்து
சாப்பிட ருசி கூடி பசியும் தீரும். திராட்சைப் பழத்திற்கு பசியைத் தூண்டி விடும் குணம் உண்டு. குடலில் கோளாறு இருந்தாலும் அது குணமாகும்.
சில கர்ப்பிணிப் பெண்களுக்கு எட்டாம் மாதத்தில் பசி இல்லாது இருக்கும். அவர்கள் தாமரைப் பூவும் நெய்தற் கிழங்கும் அரைத்து பசும்பாலில் கலந்து குடித்தால் நவம் காணலாம்.
பற்களின் மஞ்சள் நிறம் மாற…
எலுமிச்சம்பழச்சாற்றில் உப்பு கலந்து தேய்த்து வர பற்களின் மஞ்சள் நிறம் ஒரு வாரத்திற்குள் மாறி விடும்.
பல் நோய் நீங்க…
பல் சம்பந்தமான எந்த நோய் ஏற்பட்டாலும் சில துண்டு பப்பாளி பழங்களை வாயில் போட்டு மென்று பப்பாளி பழச்சாறு பல் இடுக்குகளில் புகுந்து குணமளிக்கிறது.
தென்னை மரத்து வேர்களை உலர்த்திப் பொடி செய்து வெற்றிலைப் பாக்கில் சிறிது இப்பொடியைச் சேர்த்து மென்று தின்ன நாளடைவில் பற்களும் ஈறுகளும் பலப்படும்.
சிவ சமயத்தில் காற்றை உள்ளிழுத்தால் கூட பல் கூசும். இந்தப் பல் கூச்சத்தைப் போக்க இஞ்சியைத் தட்டிப் போட்டுக் கஷாயம் வைத்து மூன்று நாள்களுக்குக் காலையில் குடிக்க பல் கூச்சம் தானே மறைந்து விடும்.
இலவங்கத்தை (கிராம்பு) நெருப்பில் கருகி விடாதபடி சுட்டு. வாயில் அடக்கிக் கொண்டு உமிழ்நீரை மட்டும் விழுங்க நல்ல சுவாச கதி கிடைக்கும். தொண்டைக் கமறல் நீங்கும். பல் ஈறுகளுக்கும் நல்ல வலுவைக் கொடுக்கும். இலவங்கத்தை நீர் விட்டு அரைத்துக் களிம்புபோல் செய்து தலைவலி ஜவதோஷம் முதலியவற்றிற்கும் பற்றிடலாம்.
எலுமிச்சை ரசத்துடன் பாதாம் கொட்டைத் தோலை அரைத்து கலந்து பல் துலக்கி வர பற்கள் முத்துப் போல் பிரகாசிக்கும். பற்களை எந்தக் கிருமிகளும் அண்டுவதில்லை.
காரட் கிழங்கை பச்சையாக சாப்பிட்டு வர நல்ல பலமான பற்கள் பெறலாம்.