
மூலிகை மருத்துவம் என்ற பெயரில் அரசு பதிவில்லாத கல்வி தகுதியும் இல்லாமல் மருத்துவமனைகள் நடத்தி, ஊடகங்களில் தொடர் விளம்பரம் செய்து துணைக்கு இந்திய மருத்துவ துறையில் பணிபுரிந்த சில மருத்துவர்களின் புகைப்படத்தையும்,விழாக்களில் அவர்கள் பேசிய சில ஒளி பதிவுகளையும் பயன்படுத்தி, சித்த ஆயுர்வேத இளம் மருத்துவர்களை வேலைக்கு பெயரளவில் வைத்துக்கொண்டு அங்கீகாரம் இல்லாத மருந்துகளை விளம்பரத்தை பார்த்து வருகின்ற சாமானியர்களை ஏமாற்றி பணம் பறித்து நோயாளிகளின் அகால மரண நேரத்தில், நான் நிர்வாகி மட்டுமே, மருத்துவம் செய்தது நான் இல்லை என்று தப்பித்துக்கொள்ளும் விளம்பர மருத்துவர்களை ஊடகங்களின் சுய கட்டுப்பாடற்ற நிலையையும் நிறுத்த இந்திய மருத்துவ துறையும். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்களும். மருந்து சான்றளிப்பு அதிகாரிகளும் ஓமலூர் நிகழ்வுக்கு பின்னராவது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முறையற்ற இத்தகைய மருத்துவ நிலையங்கள் தங்கள் பெயரை பயன்படுத்துவதை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக தவிர்க்க சொல்லவேண்டும். போதுமான மருத்துவ உள்கட்டமைப்பை குறிப்பாக அதிக அக புற நோயாளர்களை மாணவர்கள் பயிற்சி காலத்தில் கற்கின்ற நெறியை இந்திய மருத்துவ கல்லூரிகள் ஏற்படுத்தவேண்டும் .
CCIM தன் கடமையை நேர்பட செய்ய வேண்டும்.இதுவே சரியான சிகிச்சைன்றி மரணமடைந்த செல்வி .பாக்யஸ்ரீக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும். இல்லை என்றால் இந்திய முறை மருத்துவம் போலியானது என்று புறம் தள்ளப்படுவதை தவிர்க்க முடியாது.
டாக்டர் திருநாராயணன் திருமலைசாமி



