ஆக்கிரமிப்பு சர்ச் அகற்றப்படுமா..? அல்லது ஆட்சியர் மாற்றப்படுவாரா..?

புகார் பெட்டி
sengam church - 2026

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சர்ச் அகற்றப்படுமா..? அல்லது உத்தரவிட்ட ஆட்சியர் மாற்றப்படுவாரா..?

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தனித்தொகுதிக்குட்பட்ட இளையாங்கன்னி கிராமத்தில் உள்ள..

150 அடி உயர மலையில் கார்மேல் மாதா சர்ச் முப்பது ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளது..!

தற்போது மலை உச்சியை சமன் படுத்தி சர்ச்சை விரிவாக்கும் பணியை நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

இதற்காக மலைமீது சாலை அமைக்கும் பணியை எந்த வித அரசுத்துறை அனுமதியும் இல்லாமல் மூன்று மாதங்களுக்கு முன் செங்கம் திமுக எம்எல்ஏ கிரி துவங்கி வைத்தார்.

இந்த நிலையில் அந்தக் கிராமத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் இரண்டு இலட்சம் ரூபாயில் மரக்கன்றுகள் நடும் பணியை நேற்று முன் தினம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு முருகேஷ் அவர்கள் தொடங்கி வைத்த போது..

மலை மாதா சர்ச் பகுதியையும் ஆய்வு செய்த போது மலையை சமன் செய்து சாலையையும் சர்ச்சையும் விரிவாக்கம் செய்யும் பணி நடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அவருடன் ஆய்வுக்கு வந்த வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் மலையை ஆக்கிரமித்து செய்து விரிவாக்கம் செய்ய யார் அனுமதி கொடுத்தது என அவர்களிடம் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார்.

மேலும் இந்த மலையை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீதும் அதற்கு உடந்தையாய் இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும்..

ஆக்கிரமிப்பு செய்த மாதா சர்ச்சை உடனடியாக அகற்றும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்..!

ஆக்கிரமிப்பு என்ற பெயரில் பல நூறு கோவில்களை இடித்துக் கொண்டிருக்கும் இந்த அரசு..

இந்த ஆக்கிரமிப்பு மாதா சர்ச்சை அகற்றுமா அல்லது மாவட்ட கலெக்ட்டரை பணியிட மாற்றம் செய்யுமா என்பதே இப்போதைய கேள்வி..!

  • நாரதர் நாடகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.