
இந்தியா மிக முக்கியமான காலடி ஒன்றை எடுத்து வைத்து இருக்கிறது.
உலகின் அதி நவீன இலகு ரக ஒற்றை இஞ்சின் தாக்குதல் விமானம் என்றால் அது நமது தேஜாஸ் விமானங்கள் தான் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.
ஆனால் அதேசமயம் அது முழுக்க முழுக்க நம் இந்திய தயாரிப்பு அல்ல…. காரணம் அதில் பொருத்தப்பட்டுள்ள இஞ்சின் அமெரிக்க ஜெனரல் எலெக்ட்ரிகல்ஸ் தயாரிப்பு.
நமது தேசத்தின் சொந்தமான இஞ்சின் தயாரிக்கும் பணி 1989 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று நடைபெற்று வருகின்றன. அதற்கு காவேரி என பெயர் கொடுத்து இருக்கிறார்கள். இதுவரை காலமும் சுமார் 2085 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தற்சமயம் தயாரிப்பு வேலைகள் முடிந்து அதனை ரஷ்யாவில் வைத்து சோதனை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
பொதுவாக இஞ்சின் தர நிர்ணயம் என்பது அதன் சக்தி வெளிப்படுத்தும் தன்மையை வைத்தே கணிக்க படுகிறது.
இந்தியா எதிர்பார்ப்பது 110 கிலோ நீயூட்டன் சக்திக்கும் மேலே…. நமது காவேரி இஞ்சின் 90 கிலோ நீயூட்டன் தாண்டும் சமயத்தில் உதறுகிறது என்கிறார்கள். இது ஒரு குறைபாடு. அடுத்ததாக நீண்ட நேரம் அதியுச்ச தன்மையில் இயங்கும் போது தாக்கு பிடிக்க முடியாது திணறுகிறது என்கிறார்கள். இது எல்லாவற்றையும் விட எடை அதிகம் உள்ளதாக அறியப்படுகிறது.
இவற்றை களைய அநேகமாக இன்னமும் இரண்டு மூன்று ஆண்டுகள் பிடிக்கும் என்கிறார்கள். தற்போது உள்ள சூழ்நிலையில் இது சற்றே கடினமான சூழ்நிலை.

அதேசமயம் இங்கு மற்றோர் விஷயமும் கவனத்தில் கொள்ள வேண்டும்…. நம் வசம் ரஃபேல் விமானங்கள் சக்தி 80 கிலோ நீயூட்டன் சக்தியை கொண்டு இயங்குகின்றன.
அந்த வகையில் நமது காவேரி இஞ்சின் சிறப்பான முறையில் செயல் படுகிறது என்று எடுத்துக் கொண்டாலும்….. தேஜாஸ்mk1 சீரீஸ் விமானங்களில் நாம் பொருத்தவிருக்கும் அமெரிக்க தயாரிப்பு இஞ்சின் 105-112 கிலோ நீயூட்டன் சக்தியை கொடுக்கிறது.
அதனை அவர்கள் 129 சீரீஸ் என வகைப்படுத்தி இருக்கிறார்கள்.
இதனையே அவர்கள் பல விமானங்களின் பொருத்தி இருக்கிறார்கள்.
இப்படி ஒரு சூழ்நிலையில் தான் இந்தியா ஒரு முக்கிய முடிவினை எடுத்து இருக்கிறது.
பிரெஞ்சு நிறுவனமான சாப்ரானை இந்தியாவில் தனது தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் செய்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் தான் ரஃபேல் விமானங்களின் இஞ்சினை தயாரிப்பவர்கள். இந்த நிறுவனத்தின் இஞ்சின்களை தான் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் வாங்கி ரஃபேல் விமானங்களில் பொறுத்தி விற்பனை செய்கிறார்கள்.
இது நிச்சயமாக மிக முக்கியமான ஒரு முடிவாக தற்போது பார்க்கப்படுகிறது.

ஏனெனில் நமது தேசம் AMCA எனும் அட்வான்ஸ் மீடியம் காம்பேக்ட் ஏர்கிராப்ட் ப்ரோக்ராமில் கிட்டத்தட்ட 400- 550 விமானங்களை தயாரிக்க திட்டமிட்டு அதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டு இருக்கிறார்கள். இந்த சமயத்தில் இஞ்சின் இல்லாமல் தடுமாறிட கூடாது என்று தெள்ளத்தெளிவாக இருக்கிறார்கள்.
இந்த சாப்ரான் நிறுவனம் இந்தியாவில் வைத்து இயங்கும் சமயத்தில் அல்லது வரவிருக்கும் காலத்தில் விமான இஞ்சின் தட்டுப்பாடு இல்லாமல் போகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் காவேரி இஞ்சின் குறைபாடுகளை களைந்து அதனை தர மேம்படுத்தி தேஜாஸ் மற்றும் MMRCA எனும் மீடியம் மல்டி ரோல் காம்பேக்ட் ஏர்கிராப்ட் ப்ரோக்ராமில் பயன் படுத்தி கொள்ள திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கான பேச்சு வார்த்தைகள் முடிந்த ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஃது மறைமுகமாக வேறோர் விஷயத்தையும் இதனூடாக தெளிவாக சொல்லி இருக்கிறார்களாம்.
அது……
ரஷ்யாவிற்கு அடுத்து பிரான்ஸ் தான் இந்தியாவின் நம்பகமான கூட்டாளி என்கிறார்கள்.
இந்த இரு நாடுகளும் அது சார்ந்த வர்த்தகம் மற்றும் தொழில் துறை உறவுகள் வலுவடையும் என்கிறார்கள்….. இது இன்றைய பங்கு வர்த்தகத்திலேயே எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இனி வரவிருக்கும் காலங்களில் இந்திய விமானங்கள் இந்தியாவில் வைத்து தான் தயாரிக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார்கள் நம் இந்திய அரசு நிர்வாகத்தினர்.
அதுபோலவே எந்த ஒரு ஆயுத தளவாட உற்பத்தியையும் இந்தியாவில் வைத்தே மேற்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறது நம் மத்திய அரசு.அதற்கான பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது நிச்சயமாக நமது பொருளாதார வர்த்தக நிறுவனங்களில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்…… நாட்டின் நிதி நிலைமை வலு பெறும் என்கிறார்கள்.
இதனூடாக வேறோர் காரியத்தை செய்து இருக்கிறார்கள்.
நமது ராணுவத்தினருக்கு பயன் தரும் வகையில் அவர்களின் ஆயுத தளவாட உற்பத்தி மற்றும் நலன் சார்ந்த உதவிகள் செய்யும் வண்ணம் பொதுமக்களின் பங்களிப்பு இருக்கும் விதமாக இந்திய அரசு வங்கி கணக்கு ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள்…. இதில் மிகவும் குறைந்த பட்சமாக ஒரு ரூபாய் கூட செலுத்த முடியும்…. நாட்டு மக்களுக்கு தங்களால் முடிந்த தொகையை தர சொல்லி இருக்கிறார்கள். அதாவது நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாய் விதமாவது தர முடியுமா என பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.
நம் தேசத்தில் 138 கோடி பேர் இருக்கிறோம். அதில் சரிபாதியாக கிட்டத்தட்ட ஐம்பது கோடி பேர் நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் கூட மிக பெரிய மாற்றங்களை நம்மால் ஏற்படுத்திட முடியும் என்கிறார்கள். இந்த வகையில் மாதம் ஒன்றுக்கு ஆயிரத்து ஐநூறு கோடி சுலபமாக கிடைக்கும்…… நிச்சயமாக இது பெரிய விஷயம் தான்.
நமது நாட்டின் ஆயுத தளவாட உற்பத்தி மற்றும் ராணுவ வீரர்கள் நலன் சார்ந்த உதவிகளை செய்ய இது உதவும் என்று இந்த வேண்டுகோளை முன்வைத்து இருக்கிறார்கள்.
உலக பேரரசில் முதல் படி சாமானிய மக்கள் பங்களிப்பு அதில் இருக்க வேண்டும் என்கிற ரீதியிலான நிலைப்பாட்டை கொண்டு வந்திருக்கிறார்கள்.
நாளைய பாரதம் மிகவும் பாதுகாப்பானதாக… வலுவானதாக மாற இது நிச்சயமாக உதவும். கூடின வரையில் இதில் பங்கேற்ற நாம் அனைவருமே முயற்சி செய்வோம்.
ஏற்கனவே இந்திய ராணுவத்தினர் நலன் சார்ந்த நம் சமூக நலன் சார்ந்த வர்த்தக வாய்ப்புகளை முன்னெடுத்து வருகின்றனர்…. உதாரணமாக நம் ராணுவ வீரர்களின் மனைவிகள் கூட்டாக ஒன்றிணைந்து சேனா ஜல் எனும் பெயரில் தண்ணீர் பாட்டில்களை உற்பத்தி செய்து வருகின்றனர்…. அதுபோலவே நம் முன்னாள் ராணுவ வீரர் திரு வரகூர் கிருஷ்ணன் என்பார் பவானி குரூப் ஆஃப் கம்பெனிஸ் என்கிற பெயரில் நுகர்வோர் பொருட்களின் சந்தையை இந்திய அளவில் உண்டாக்கிட முழு முனைப்புடன் செயலாற்றி கொண்டு வருகிறார்.
இது போன்ற…. இவர்கள் போலானவர்களை ஊக்குவிப்பு செய்வது நமது கடமை ஆகும். சிறு துளி பெருவெள்ளம்…. சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தி வந்தால் பெரிய விஷயம் தானே நடக்கும்.
- ஜெய்ஹிந்த் ஸ்ரீ ராம்