மாணவர்கள் கொஞ்சம் கவனமாக உண்மையை தேடவேண்டும் என்று நான் ஏன் கூறவேண்டும்? போராளிகளை நம்ப வேண்டாம் என்று ஏன் மாரிதாஸ் கூறுகிறேன்? இது பொதுவாக என்னை சந்திக்கும் என் முன்னாள் மாணவர்கள் கேட்கும் கேள்வியாக உள்ளது. இதற்கு என் பதில் இந்த பதிவு.
“மாணவர்கள் போராட்டங்கள் அறிவார்ந்து இல்லை ; whatsapp சார்ந்து உள்ளது” அது தான் இதில் இருக்கும் பிரச்சனை எனவே நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற மாணவர்கள் எண்ணம் பாராட்டதக்கது. ஆனால் உணர்ச்சியை தூண்டிவிட்டு உண்மையை மறைத்து தந்திரமாக போராட்டங்கள் கட்டமைக்கபடுவதை மாணவர்கள் உணராது போனால் நாட்டுக்கு நல்லது நடக்காது. இது நான் என்னை வந்து சந்திக்கும் என் முன்னாள் மாணவர்கள் அனைவரிடமும் கூறுகிறேன்.
அது ஏன் என்று என்னால் முடிந்த வரை எளிமையாக விளக்குகிறேன்..
———————————-
நீங்கள் மாணவர்கள் போராட்டம் நடக்கும் இடத்திற்கு சென்றால் – போராட்டம் ஒருபக்கம் நடக்கும் போது இன்னொரு பக்கம் கலந்து கொண்ட மாணவர்கள் தொலைபேசி எண் சேகரிக்கும் வேலையை சிலர் செய்வது தெரியும். போராட்டம் சென்ற அனைவருக்கும் இது நடந்திருக்கும்.
“தோழா, உங்க போன் நம்பர் தாங்க.. அடுத்த போராட்டம் எதும் நடந்தா உங்களுக்கு சொல்றோம். மாணவர்கள் மாற்றத்தை ஒற்றுமையாக இருந்து உருவாக்க ஒரு தொடர்பு வேண்டும். அதனால உங்க நம்பர் கொடுங்க தோழா” என்று மாணவர்களிடம் , அங்கே கலந்து கொண்ட அனைவரிடமும் இருந்து mobile number வாங்கி கொள்வர்.
இதை தொடர்ந்து மாணவர்களுக்கு தேசத்தில் நடக்கும் அநியாயங்கள்… கார்ப்பரேட் எதிப்பு…. அரசு திட்டங்கள் எதிப்பு என்று தொடர்ந்து அவர்களுக்கு நாட்டில் நடக்கும் தவறுகளை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல செய்திகளை அனுப்புவர் இந்த போராளிகள்.
யார் இந்த போராளிகள்? எங்கே இருந்து போராட்டங்கள் ஆரம்பம் ஆகின்றன???? ஏன் இவர்களுக்கு வேற வேலை இல்லையா????இந்த கேள்விக்கும் விடை தேடுங்கள். உண்மை எளிமையாக புரியும். தமிழகம் மட்டும் எடுத்து கொள்ளுங்கள்…
முதலில் மாணவர்கள் போராட்டம் தமிழகத்தில் எங்கிருந்து ஆரம்பம் ஆகிறது..!!!!!!! ரெம்ப யோசிக்கவேண்டாம்… சென்னையில் இருந்து தான் முதல் அதிர்வு உருவாகும். எந்த எந்த கல்லூரி மாணவர்கள் முதலில் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள் என்று நான் வழக்கமாக தேடி பார்ப்பது உண்டு.
அவை:
லயோலா , நியூ காலேஜ், மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ், ஸ்டெல்லா மேரிஸ் , women கிறிஸ்டியன் காலேஜ், ymca காலேஜ், st christophe காலேஜ் என்று ஒரு டஜன் கல்லூரிகள் அதன் மாணவர்கள் தான் முதலில் போராட்டங்களில் வெளிவருவர்… மாணவர்கள் போராட்டங்கள் இங்கே தான் எனக்கு தெரிந்து முதல் ஆரம்பம் ஆகும்.
பின்னர் இதன் கிளைகளுக்கு பரவி , மாணவர் போராட்டமாக உருவாக்கம் செய்யப்படும்… இவை திட்டமிடபட்டு தெளிவாக நடத்தபடுகின்றன என்பது என் குற்றசாட்டு.
மேலே சொன்ன அனைத்து கல்லூரிகளும் ஆண்டுக்கு 20கோடி முதல் 100கோடி வரை அரசிடம் நிதி பெற்று முழுக்க கிருஸ்தவ அமைப்புகளால் நடத்தப்படும் கல்லூரிகள். இதில் இருக்கும் அனைத்து ஆசிரியர்கள் 100%கிருஸ்தவர்கள். இங்கே இருக்கும் மதம் மாற்றும் அமைப்புகளுக்கு இந்த கல்லூரி நிர்வாகிகளுக்கும் பெரிய அளவு நல்ல தொடர்பு காலம் காலமாக இருக்கிறது என்பது உண்மை.
இந்த விவகாரத்தை இப்படியே விட்டுவிட்டு , அடுத்த இன்னொரு விவகாரம்…
கம்யூனிஸ்ட் தீவிரவாத அமைப்புகளான நக்சல் , மாவோஸ்ட் அமைப்பில் வேலை செய்யும் நபர்கள் பொதுவாக கம்யூனிஸ்ட் கட்சியில் அதிகம் உண்டு. இந்த இடதுசாரி தீவிரவாத கூட்டம் ஒருபக்கம் ரயில்களை கவிழ்ப்பது , இராணுவ வீரர்களை கொலை செய்வது , துணை ரானுவபடைக்கு இளைஞர்கள் சேர்வதை தடுக்க அச்சம் உருவாக்க இந்த விதம் தாக்குதல் அதிகம் பிகார் , மேற்குவங்காளம் பரவி கர்நாடகா வரை அதிகம் நடமாட்டம் இருக்கும். தமிழகத்தில் திமுக ஆட்சியில் நடமாடும் இவர்கள் – பொதுவாக ஜெயா ஆட்சியில் இருப்பது இல்லை.
ஜெயா இறந்த பின் – தற்சமயம் இங்கே தமிழகத்தில் பெரிய அளவு வாய்ப்பு இவர்களுக்கு உருவாகியுள்ளது. இந்த வாய்பை பயன்படுத்த முழுமையாக களமிறங்கி உள்ளனர். இவர்கள் தான் இந்த நவீன புதிய போராளிகள்,…
அட என்ன மாரிதாஸ் இப்படி சொல்றேங்க??? நாட்டுக்கு நல்லது செய்ய போராடினால் தவறா????
நாட்டுக்கு நல்ல செய்ய போராடும் யாரையும் நான் குறை சொல்ல விரும்பவில்லை. ஆனால் நக்சல் நாட்டில் நல்லது செய்ய விரும்பும் கூட்டம் அல்ல. அது சீனாவின் உதவியுடன் இந்தியா என்ற தேசத்தை உடைக்கக் வேண்டும் என்று வேலை செய்யும் தீவிரவாத கூட்டம்…. ஆண்டுக்கு சில ஆயிரம் கோடிகளை இந்த தீவிரவாத நாய்களுக்கு பட்ஜெட் போட்டு கொடுத்து உதவுகிறது சீனா.
ஆட்சியர்கள் ,அரசு , நிதி துறை இந்த அனைத்தின் மீதும் நம்பிக்கையின்மையை மக்கள் மனதில் விதைப்பது மூலம் “அரசுக்கு – மக்களுக்கும் இடையே அறிவிக்கபடாத போரை உருவாக்க வேண்டும்” , இதன் மூலம் மக்களுக்கு நாட்டின் மீது ஒரு அவமரியாதை உருவாக வேண்டும்… அப்படி ஒரு அதிர்வை மக்கள் மனதில் உருவாக்கிவிட்டால் அதுவே புரட்சி செய்ய எளிது- பிரிவினை விதைப்பது எளிது – இந்தியா என்ற தேசம் உடைக்க வழி.
இதை கணக்கில் கொண்டு தான் அனைத்து போராட்டமும் வடிவமைக்கபடுகிறது. மக்கள் எல்லோரும் நல்லவர்கள் – ஆட்சியர்கள் எல்லோரும் கெட்டவர்கள் , தனியார் நிறுவனம் என்றால் கெட்டவர்கள்- மக்கள் எல்லோரும் நல்லவர்கள்…. என்று நல்லவன் கெட்டவன் என்ற இந்த ஒற்றை சினிமா போக்கு போல சிந்தனைகளை விதைக்கிறார்கள்.
நான் கேட்கிறேன்… இந்த எந்த போராளியாவது
தூய்மை இந்தியா திட்டம் மூலம் சுத்தம் செய்ய முன் வாருங்கள் மாணவர்கள் என்று அழைத்தானா????
முத்ரா யோஜனா திட்டம் மூலம் மிக மிக எளிமையாக கடன் தொழில் தொடங்க மோடி அரசு அறிவித்த திட்டம் பயன்படுத்தி மாணவர்கள் , வேலை தேடும் பட்டதாரிகள் எப்படி தொழில் தொடங்கலாம் என்று ஒரு ஆரோக்கியமான விவாதம் என்றாவது இந்த போராளிகள் பரப்பியது உண்டா???
ஏன் அரசின் எந்த நலத்திட்டமும் இவர்கள் மக்களிடம் , மாணவர்களிடமும் சென்று சேரும் வண்ணம் உழைப்பது இல்லை????
மனசாட்சி தொட்டு சொல்லுங்கள் மாணவர்கள் வாங்கிய கல்விகடனை அரசு என்ன மிரட்டியா கட்ட சொல்கிறது????? இல்லை கட்ட சொல்லி அவமானம் செய்கிறதா???? கடன் வாங்கிய மாணவர்கள் அனைவரும் மனசாட்சியுடன் பேசுங்கள்…
ஆக ஆட்சியில் இருப்பவர்கள் , நீதி துறையில் இருப்பவர்கள் யாருக்கும் நாட்டின் மீது அக்கரை இல்லை. இந்த போராளிகளுக்கு தான் உள்ளதா????
எதற்கு அரசு நிறுவனங்களான ONGC, Gas Authority of India, NTPC போன்றவைகளை மாணவர்கள் எதோ தனியார் துறைகள் போலவும் – அவர்கள் திட்டங்கள் மூலம் நாடு நாசம் ஆகும் என்றும் அதனால் போராட்டம் நடத்த வாருங்கள் என்று வீடியோ ஆடியோ என்று ஆதாரங்கள் அனுப்பும் இவர்கள் – ஏன் நீதிமன்றம் செல்வது இல்லை???? இந்த ஆதாரங்களை கொண்டு நீதிமன்றம் செல்லலாமே…..???
நீதிகிடைக்காது என்றால் திருமுருகன் காந்தி என்ற டேனியல் வழக்கில் விடுவிக்கப்பட்ட பின்னர் மட்டும் நீதி வென்றதா????… ஆக நக்சல் மாவோஸ்ட் போன்ற கம்யூனிஸ்ட் தீவிரவாத கூட்டங்களுக்கு நல்ல வாய்ப்பு ஜெயா இறந்த பின்னர் தமிழகத்தில் உருவாகிவிட்டது.
இதை இப்படியே விடுவிட்டு அடுத்து ஒரு கூட்டத்தை பார்க்கலாம்… அது பல காலமாக இந்த மண்ணில் ஏமாற்றி பிழைப்பு நடத்தும் வெக்கம் கெட்ட கூட்டம்.
வேறு யாரும் அல்ல பெரியார் இயக்கங்கள்… திராவிட இயக்கங்கள்…
மே17 , கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு , தமிழ்த் தேச விடுதலை இயக்கம் , தமிழ்ப் புலிகள் திருவள்ளுவன், இளந்தமிழகம் ,தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழர் விடியல் கட்சி, திராவிடர் விடுதலை கழகம் என்று புதிய புதிய இயக்கங்கள் உருவாக்கி பெயரை வச்சு போராளிகள் உருவாக்கும் வேலை இந்த திராவிட கழகம் என்ற இயக்கம் ஆண்டாண்டுகலாக செய்யும் வேலை.
இவர்கள் அனைவரும் எதற்கு பிரிந்து கொண்டு ஆனால் ஒரே கோசமாக “ஹிந்துகள்- இந்தியா” இரண்டுக்கும் எதிராக பேசவேண்டும்???
இவர்கள் எண்ணமும் இந்தியா சிதறவேண்டும்…. என்பது தான் ஒழிய வேறு ஒன்றும் இல்லை.
இன்று நீங்கள் திடீர் போராளிகள் என்று காணப்படும் இவர்கள் எல்லோருமே மேலே சொன்ன எதாவது ஒருவகையில் வந்தவர்கள். அனைவரின் நோக்கம் பிரிவினை என்றாலும்… பொது எதிரி பிஜேபி – மோடி – ஹிந்துத்துவா தான்.
மீண்டும் சொல்கிறேன் இவர்களுக்கு நோக்கம் வேறு வேறாக கூட இருக்கலாம்.. ஆனால் பொது எதிரி ஹிந்துத்துவா… பிஜேபி….
ஹிந்து பெயரில் ஒழிந்து கொள்ளும் சீமான் , திருமுருகன் , கூடன்குளம் உதயகுமார் என்று போராளிகள் அனைவரும் ஏதோ ஒற்றுமை இருக்கு. அதை coincidence என்று எடுத்துகொள்ள முடியாது.
நாடுமுழுவதும் போராட்டங்கள் உற்று பார்க்கும் முன்னர் தமிழகத்தில் ஜல்லிகட்டு போராட்டம் அடுத்து மாணவர்களை தொடர்ந்து போராட்டங்களை தூண்டிவிடபடுவது வாடிக்கையாக உள்ளது. இதில் நாட்டுக்கு எதிரான பரப்புரையும் மெல்ல “ஹிந்தி எதிப்பு , தமிழ் உணர்வு, வட இந்தியன் தென் இந்தியன்” என்று பிரிவினைகள் மெல்ல திணிக்கப்படுவது அப்பட்டமாக தெரிகிறது. இதனால் தான் மாணவர்களின் உணர்வுகளை தூண்டி போராட்டங்கள் தங்கள் ஆதாயம் தேடி கட்டமைக்கபடுவது – மாணவர்களுக்கு தெரியாத வண்ணம் நடக்கிறது என்று கூறுகிறேன்.
மாணவர்கள் நாடு நல்லா இருக்க வேண்டும் என்ற நோக்கம் சரி… ஆனால் போராட்டம் தூண்டிவிடும் கூட்டத்தின் நோக்கம் மோசமானது.
எந்த whatsapp , facebook போராட்டம் நடத்தலாம் வாங்க – group வச்சு புரட்சி பேசுறேன் நாட்டை புரட்சியால் மீட்பேன் என்று எவனாது உங்கள் mobile நம்பர் கேட்டால் தயவு கூர்ந்து கொடுக்க வேண்டாம்.. உடனடியாக அந்த குரூப்பில் இருந்து வெளிவந்து விடுங்கள். அந்த கூட்டத்தில் இருபதால் நீங்கள் நிம்மதி இழந்து எதோ ஒருவித போராட்டம் , வெறுப்பு , கோபம் என்று மொத்தமாக மாறிவிட்டீர் என்று உங்களுக்கு தோன்றவில்லையா ????
மாணவர்கள் RSSல் சேர்ந்து ஹிந்துகளை காப்பாற்றுங்கள்… ஹிந்துகள் ஒற்றுமை இல்லை என்றால் நாடு என்ன ஆகும்!!!!! இப்படி பேசி நான் இதை எழுதவில்லை.
உணர்வை தூண்ட நான் விரும்பவில்லை… மாணவர்கள் தயவு கூர்ந்து வீட்டுக்கு கொஞ்சம் பொருள் சேருங்கள்… economical சிந்தனைகளை கொஞ்சம் வளர்த்து கொள்ளுங்கள். நாலு காசு இல்லை என்றால் காதலி கூட மதிக்க மாட்டாள் தயவு கூர்ந்து இந்த எதார்த்தம் புரிந்து கொள்ளுங்கள். நேர்மையாக பொருள் தேடி வீட்டை செட்டில் செய்துவிட்டு அப்புறம் நாட்டை பற்றி பேசலாம்.
நான் மாரிதாஸ், இதுவரை என்னால் முடிந்த அனைத்தையும் மாணவர்களுக்கு மதம் ஜாதி பார்க்காமல் செய்தவன்.. உங்கள் போராட்ட குணம் உங்கள் வீட்டின் பொருளாதாரம் மேம்பட வேண்டும் என்பதாக இருக்கட்டும். இதை என் வேண்டுகோளாக எடுத்து கொள்ளுங்கள்.
இறுதியாக :
17ஆம் நூற்றாண்டு வரை கூட உலக ஆடை மொத்த உற்பத்தியில் 27% வரை இந்தியாவுடையது. ஆனால் பிரிட்டீஸ் ஆட்சியர் முடிவில் அது 2%ஆக வீழ்ச்சியை கண்டது. அந்த அளவுக்கு நாசம் அடைந்த இந்திய பொருளாதாரம், 1947ல் வீட்டு பெண்களுக்கு கூட 1சேலை 2சேலை தான் இருக்கும், உழைப்பாளிகள் வீட்டில் 1வேட்டி 2வேட்டி தான் இருக்கும். 1947ல் பிரிடீஸ் விட்டு செல்லும் பொது படித்தவர்கள் வெறும் 7% கூட கிடையாது. மக்களுக்கு ஒருவேளை உணவு கூட கொடுக்க முடியாத அளவு பொருளாதர வீழ்ச்சியை பரிசாக கொடுத்து சென்றனர். ஆனால் இன்று??? மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள். இன்னும் முன்னேற்றம் வேண்டும், அதனை நோக்கி ஆரோக்கியமான சிந்தனையுடன் செயல்படுங்கள்..
“இந்தியா என்பது என் தாய்… ஒரு இராணுவ வீரனுக்கு வேண்டிய கட்டுபாடுடன் இந்த தேசத்தை நேசிப்பேன் ” இதை மட்டும் கட்சி, மதம், ஜாதி சார்பு தாண்டி மனத்தில் நிறுத்தி கொள்ளுங்கள்.
ஒருநாளும் மதம் மாற்றும் கூட்டத்தை, திராவிட கழகத்தை நம்பவேண்டாம்.
-மாரிதாஸ்




