சூத்திர சாமியின் பார்ப்பன பக்தன்!

உரத்த சிந்தனை புகார் பெட்டி பொது தகவல்கள்

09 June19 nadarajar - 2026

பார்ப்பனர்கள் எவராவது நம்ம சாமிகளைக் கும்பிடுகிறார்களா?” – இப்படி வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட  சமூக வலைத்தளங்களில் கேள்வியாக எழுப்பப் படுவது போல் பரப்பி வருகிறார்கள் சிலர்.

“உண்மையில் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான பார்ப்பனக் குடும்பங்களுக்கு நாட்டார் தெய்வங்களே குல தெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் இருந்து வருகின்றன”.

“பிரபல கலை இலக்கிய விமர்சகர் வெங்கட்சாமிநாதனின் குல தெய்வம் தஞ்சை உடையாளூர் செல்ல மாகாளி அம்மன். முதல் பொங்கல் படையல் அவளுக்குதான். படையல் வைப்பது பூசாரிதான். குடும்பங்களில் வீட்டுக்கு ஒரு பெயர் ‘செல்ல’ என்று தொடங்கும்.”

“புதுக்கோட்டை அருங்காட்சியகக் கண்காணிப்பாளர் முத்து ஸ்ரீநிவாசன் வடகலை வைணவப் பார்ப்பனர். முத்து என்ற அவர் பெயரின் முன்னொட்டு குல தெய்வம் முத்து கருப்பசாமியை சுட்டுகிறது.”

“எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் மனைவி கமலா ராமசாமி தனது நூலில், தன் தந்தையார் மாடசாமி கோவில் கொடையில் ஆண்டுதோறும் கலந்து கொள்வதோடு, இவர் திருநீறு இட்டுவிட்ட பிறகுதான் சுவாமி மலையேறும் என்று குறிப்பிட்டுள்ளார்”.

“நாடகாசிரியர் ‘கூத்துப் பட்டறை’ ந. முத்துசாமிக்கு குல தெய்வம் தஞ்சை மாவட்டம் ‘செண்டாடும் ஐயனார்’. தஞ்சையில் உள்ள ‘சிறைகாத்த ஐயனார்’ தான் தஞ்சை மாவட்டத்தில் பல பார்ப்பனக் குடும்பங்களுக்குக் குல தெய்வம்”

“சென்னை தரமணியில் வசிக்கும் பிராமணர் சுதர்சன ஹோமம், ம்ருத்யஞ்ஜய ஹோமம் போன்றவற்றை செய்து வைக்கிறார். அவர் பெயரே முனீஸ்வர சாஸ்திரிகள்.!”
(‘திராவிட இயக்கம் – புனைவும், உண்மையும் by மலர்மன்னன்/ கிழக்கு பதிப்பகம் – பக்கம் 70 & 71)

எனது வங்கி ஊழியர் நண்பர் பிராமணர். அவர் பெயர் முனியாண்டி. அவரது தகப்பனார் சாம்ப மூர்த்தி (அதாவது சுடலைப் பொடி பூசிய சிவன்). நிறையப் படியுங்கள் நண்பரே.

சும்மா எவனோ சொன்னதைக் கேட்டுகிட்டு… ‘பார்ப்பான் நம்ம சாமியைக் கும்பிட மாட்டான் – மாரியாத்தாளுக்கு சாமி வந்து ஆடும் பாப்பாத்தியைப் பார்த்தது உண்டா?- னு பேசிகிட்டு…

நம்மளுது சூத்திரச் சாமி/ ராமன் கிருஷ்ணன் எல்லாம் பார்ப்பனச் சாமி!-னு பேசிக்கிட்டு…

ராமன் சத்ரியன்: கிருஷ்ணன் யாதவன்! எங்களுக்குத் தெரிந்த ‘மாமி’ யே ஒருவர் ‘பெரியாண்டவன்’ படையல் நடந்தால் சாமி இறங்கி ஆடுவார்! எல்லாரும் எல்லா தெய்வங்களையும்தான் வழிபட்டனர்.

ஈரோட்டுக் கடைத்தெருவில் வாங்கி வந்து,(ஈவேரா) காஞ்சிபுரம் சந்தையில்(அண்ணாதுரை) பரப்பப்பட்ட இந்த வாதங்கள் போண்டியாகிப் பல நாள்கள் ஆகி விட்டன நண்பரே! கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’- மேலும் பல புரிதல்களை உருவாக்கும். ‘பார்ப்பான் வருவதற்கு முன் தமிழனுக்கு மதமே இல்லை’- போன்ற வாதங்களை ஆதாரபூர்வமாகக் கிழித்திருப்பார்!!

– முரளி சீதாராமன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.