அன்று நரசிம்மராவுக்கு மறுத்த காங்கிரஸ்காரர்கள்… இன்று கருணாநிதிக்கு குரல் கொடுக்கிறார்கள்!

Published:

karunanithi death - 2026

23 Dec 2004. நரசிம்மராவின் உடல், Aiims இலிருந்து, மதியம் 2.30 மணிக்கு அவரின் வீடான 9, மோதிலால் நேரு மார்க்கிர்க்கு.. வருகிறது.

அவரின் எட்டு பிள்ளைகளும், பேரப்பிள்ளைகள் எல்லோரும் சூழ்ந்திருக்க.. ஷிவ்ராஜ் பாடீல்.. வந்து சேர..மெள்ள ஆரம்பிக்கிறார். கடைசி பிள்ளை பிரபாகர ராவிடம்.. உடலை என்ன செய்யப்போவதாக உத்தேசம்..? தில்லிதான் எங்களின் கர்ம பூமி. இங்கேயே எரித்துவிட்டு.. இங்கே ஒரு நினைவு மணி மண்டபம் கட்டிவிடலாம் என்றிருக்கிறோம்.

இல்லை. ஹைதிரபாதிற்கு எடுத்து செல்லுங்கள். அதுதான் சரி. அவர் இங்கேதான பிரதமராக இருந்தார்..? இங்கேயே காரியங்களை செய்வதுதானே சரி..? இங்கு நீங்கள் எது செய்தாலும் யாரும் வர மாட்டோம் என்றார் சிவராஜ் பாடீல். ஷாக் ஆகிறது ராவின் குடும்பம்.

குலாம் நபி ஆசாத், அஹமத் படேல் போன்றோர்கள்..ஹைதிராபாத் தான் சரியாக இருக்கும். சரியாய் ஒரு மணி நேரம் கழித்து.. ஓய் எஸ் ஆர் ரஜசேகர ரெட்டி.. நான் தில்லி வந்து கொண்டிருக்கிறேன். இங்கு ஹைதிராபாதில் எரித்து இங்கேயே பெரிய மண்டபமும் கட்டிவிடுவோம். இதி மன தேசம்.. என்றார்.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

மன்மோகன் சிங்கிடமும், ப்ராபாகர் ராவ் மன்றாடினார். இங்கேயே.. இல்லை கிடையாது..என்று பதில் வர.. YSR முக்கியமான ரோலில் விளையாடி ஹைதிராபாத் என்று குடும்பத்தை சம்மதிக்க வைத்தார்.

இந்திய தேசிய கொடிய சுற்றிவிட, உடலோடு ஊர்வலம் கிளம்பியது. 24 அக்பர் ரோடில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்குள் தலைவர் உடல்களை அனுமதித்த பின்.. மரியாதை தந்த பின் உடல் தகனத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இது மாதவ்ராவ் சிந்தியா இறந்த போது அல்லது பெரிய காங் தலைவர்கள் இறக்கும்போது நடக்கிற நிகழ்வுதான்.

உடலை சுமந்த ஊர்தி, காங் அலுவலகம் முன்பு நின்றது. ஆனால்.. மந்திரி மார்கள், காங்கிரஸ் காரிய கர்த்தாக்கள்.. தெருவில் வந்து மரியாதை செலுத்தினார்கள். ஆனால் கடைசிவரை காங் அலுவலக கதவு நரசிம்ம ராவிற்கு திறக்கப்படவே இல்லை. தில்லியில் ஒரு மணி மண்டபம் கட்ட அனுமதி தரவில்லை.

காரணம் சோனியா அதற்கு சம்மதிக்கவில்லை. ராவை, தேசிய தலைவராக எவரும் மனதில், நிலை நிறுத்திவிடக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தார்.

ALSO READ:  'வந்தேமாதர'த்தை மதச் சண்டையாக்க வேண்டாம்!

ஆனால் அந்த பிவி நரசிம்ம ராவ்தான்.., இந்தியாவின் இன்றைய வளர்ச்சிக்கு அடிக்கல் நாட்டியவர். இப்போது ஏன் இது..?

.. நரசிம்ம ராவ் இறந்த போது.. அவரின் உடலுக்கு தில்லியில் இடம் தர முடியாது என்று மறுத்த குலாம் நபி ஆசாத் போன்ற ஏவல் ஆட்கள்.. இன்று கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் தர வேண்டும் என்று முதல்வர் எடப்பாடியிடம் அழுத்தத்துடன் கோரிக்கை வைக்கிறார்கள்..

இவ்வளவு சீக்கிரமாகவா ஒரு வட்டம்.. முழுச்சுற்று வந்து விடுகிறது..?

#சமூக வலைத்தளப் பகிர்வு!

Related articles

Recent articles

spot_img