மாறனுக்கான அரசு செலவை கண்டு கொள்ளாதவர்கள் ஜெயலலிதாவுக்கான கட்சி செலவை கேலி செய்கிறார்கள்!

உரத்த சிந்தனை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
jayalalitha apollo - 2026

நிதானமாக யோசிக்கும் ஒரு அனுபவஸ்தரின் பார்வை… ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து தீர்ப்பு சொல்ல வேண்டியது அரசின் கடமை.
ஆனால், மருத்துவமனைக்குக் கட்டிய பில் பற்றி நாம் ஏன் கவலைப் படவேண்டும்?

Ashwin கேட்பது நியாயமாகத் தான் இருக்கிறது…

அப்பல்லோவில் எழுபத்தாறு நாட்கள் தங்கி மருத்துவம் பார்த்த JJ ஒன்றரை இட்லி, ஒரு கப்பு சூசு குடிச்சதுக்காக ஒன்னே முக்கா கோடி ரூபாய்க்கு சாப்பாடு செலவு ஆச்சுன்னு, மருத்துவமனை பில் போட்டது பத்தி நிறைய பேர் முகநூலில் போஸ்டு போட்டிருந்தாங்க.

எனக்கு தோன்றிய எண்ணங்கள் கீழே:

ஒண்ணு: மருத்துவமனை கொடுத்த பில்லை அதிமுக கட்சி முழுமையாக ஏற்றுக் கொண்டு விட்டது. இதனால் அரசுக்கு இந்த செலவு மிச்சம்.

இரண்டு: அம்மாவோட இருந்த கட்சிக்காரங்க தானே சாப்பிட்டாங்க. அதைப் பத்தி கட்சியே கவலைப் படாத போது மத்தவங்க ஏன் கூவறாங்க???

மூன்று: மத்திய அமைச்சராக இருந்த போது திரு முரசொலி மாறனின் நலக் குறைவு தொடர்பான அனைத்து மருத்துவ செலவுகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டதாக அப்போது செய்தி வந்தது. அரசுக்கு ஏன் இவ்வளவு செலவு ??? நாங்களே கொடுத்து விடுகிறோம் என்று கார்பொரேட் நிறுவன அதிபர்களாக இருந்த அவரது மகன்களோ, திமுக கட்சியோ சொன்னதா? அரசு செய்த மொத்த செலவையும் பின்னாளில் ஏற்றுக் கொண்டார்களா? ஏற்றுக் கொண்டார்கள் எனில் மகிழ்ச்சியே..

நான்கு: சமீபத்தில் மறைந்த திமுக தலைவருக்கு மருத்துவமனையில் செலவுகள் ஆன போது கட்சிக்காரர்களுக்கு தேநீராவது கட்சி செலவில் வழங்கி இருந்திருப்பார்களா? அப்படி வழங்கி இருந்தால் அதில் என்ன தவறு???

இது கட்சி சார்பானது அல்ல. பொதுவாக ஒரு சாதாரண பிரஜையின் பார்வையில் எழுந்த எண்ணம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.