தாலிகட்டிக் கொண்ட மனைவி தன்மையோடு அழைக்கிறார் போங்க ஸ்டாலின்..! அவங்களுக்கு தெரியும் சடங்கு மந்திரப் பொருள்!

Published:

stalin - 2026

ஸ்டாலின் இந்துக்களின் திருமணம் குறித்து கிண்டலடித்துப் பேசுவது குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அது கிண்டல் அடிப்பதுதான் என்றால்.. ஸ்டாலின் பின்னால் நின்றிருக்கும் திமுக., கொத்தடிமைகள் நாலு பேர் கைதட்டி ரசிக்கிறார்கள்… அதுவும் ஐயருக்கு மந்திரத்தின் பொருள் தெரியாது என்று இவரிடம் சொன்னதால்..! அது தவிர மண்டபத்தில் வேறு எவரும் கைத்தட்டி ரசிக்கவில்லையே!

கூடியிருந்த எந்த இஸ்லாமியரும் கைத்தட்டி ஆரவாரம் செய்து அதை ரசித்து வரவேற்கவில்லை என்பது அந்த வீடியோவில் நன்றாகத் தெரிகிறது. காரணம்,.. ஒரு மயான அமைதிதான் ஸ்டாலின் பேசும்போது கூட்டத்தில் தெரிகிறது. கலகல என்று இருக்க வேண்டிய கல்யாண மண்டபத்தை இப்படி எழவு வீடு மாதிரி ஆக்கிய ஸ்டாலினை கூட்டத்தில் இருந்தவர்கள் வசைபாடி திட்டித் தீர்த்ததாகத் தெரிகிறது!

இந்துக்கள் பாருங்கள் கேவலமாக… தரையில் உட்கார்ந்து கொண்டு திருமணம் செய்கிறார்கள்… ஆனால் இஸ்லாமியர்கள் நாற்காலியில் அமர்ந்து கொண்டு திருமணம் செய்கிறார்கள் என்று ஸ்டாலின் கூறியதால், நின்று கொண்டே திருமணம் செய்து கொள்ளும் கிறிஸ்துவர்கள் இப்போது ஸ்டாலின் மீது கடுங்கோபத்தில் இருக்கிறார்கள்!

ஆக… 
ஸ்டாலின் என்ன பேசினார் என்பது கூட்டத்தினருக்குப் புரியாமலும் தெரியாமலும் இருந்திருக்க வேண்டும்…

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

ஆக…
ஸ்டாலின் பேசுவதை தாங்கள் விரும்பவில்லை என்பதாக அந்த இஸ்லாமியர்கள் புறக்கணித்து அமைதி காத்திருக்க வேண்டும்…

ஆக…
இஸ்லாமியர்களுக்கே தெரிந்திருக்கும், தங்கள் இறைவனை தொழும் மொழி தங்களுக்குப் புரிவது போல் இந்துக்களின் சடங்கு மொழி அவர்களுக்குத் தெரிந்திருக்கும் என்பது…

ஆக…
கர்நாடகத்திலும் கேரளத்திலும் இந்துக்களுக்குப் புரியும் சடங்கு மொழி தமிழகத்தில் தெரியாமல் போனதற்கு திராவிட இயக்கத்தின் கொடூரங்களே காரணம் என்பதும் இஸ்லாமியர்களுக்கு தெரிந்திருக்கும்…

ஆக…
தங்கள் திருமணக் கூட்டத்தில் வந்து இந்துக்களின் சடங்கை கேலி பேசும் இந்த நபர் நம்பிக்கைக்கு உரிய நல்ல நபர் இல்லை என்பதை அந்த உண்மையான இஸ்லாமியர்கள் புரிந்து கொண்டிருப்பதும் நன்கு வெளித்தெரிந்திருக்கிறது…

ஆக…
ஆக…
ஆகா… ஆகா.. ஆகிப் போச்சுடா டேய் வாய மூடிட்டு வாடா இங்க… என்று பெருமதிப்புக்குரிய … பெண் அடிமைத்தனத்தை விட்டு விலக்கிய … பெண் சுதந்திரம் பேணும் வகையில்… தாலி கட்டிக்கொண்ட திருமதி துர்கா அம்மையார் தன் கணவன் ஸ்டாலினை அழைக்கும் சத்தம் நமக்குக் கேட்கிறதே..! அடடே… அடடே..!

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

கல்யாணச் சடங்கின் மந்திரப் பொருள் உனக்குப் புரியாது; ஆனால் உன் மனைவி திருமதி துர்கா அம்மையாருக்கு நன்றாகப் புரியும்! அவரிடம் இருந்து கேட்டு அறிந்து கொள்ளவும்! மனைவி சொல்லே மந்திரம் என்பது பிறகு புரியும்! அது புரிந்துவிட்டால்… இப்படி கண்ட கண்ட கல்யாண மண்டபத்துல வந்து கல்லடி பட வேண்டியிருக்காது!

இப்படிக்கு,

கல்யாணம் ஆகாததால்
மனைவி இல்லாத மனிதன்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img