திருவானைக்கா கோவில் சிற்பங்கள் ட்ரோன் மூலம் ஒளிப்பதிவு!

thiruvanika 4
thiruvanika 4

திருவானைக்காவல் கோயில்களில் உள்ள சிற்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக சிற்பங்களை ‘டிரோன் கேமரா’ மூலம் ஒளிப்பதிவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

‘திருவனைக்காவல்’, ‘திருஆனைக்காவல்’ என்றெல்லாம் அழைக்கப்படும் ‘திருவானைக்கோவில்’, திருச்சியின் காவிரிக்கரையோரம் அமைந்துள்ளது.

இதனை ‘திருவானைக்காவல்’ என்றும் சிலர் ‘திருவானைக்கா’ என்றும் அழைக்கின்றனர். அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், தாயுமானவர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை ‘பாடல்கள் பல பெற்ற தலம்’ என்பார்கள்.

இக்கோயில் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான ‘நீருக்கு’ உரியது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 60-வது திருத்தலம் ஆகும்.

தமிழகத்தில் உள்ள பல கோயில்களில் உள்ள சொத்துகள் பலராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோயில்களின் சொத்துகள் மீட்பது குறித்து தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வரப்படுகிறது.

கோயிலுக்கு எவ்வளவு சொத்துகள் உள்ளன, எங்கெல்லாம் சொத்துகள் உள்ளன, அதன் தற்போதைய மதிப்பு என்ன, என்று தமிழகம் முழுவதும் தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில் நிர்வாக அலுவலர்கள் பணிகள், திருப்பணிகள் மற்றும் விழாக்கள் போன்ற தகவல்களை இணையத்தில் வெளியிட வேண்டும்;

திருக்கோயில்களில் நடைமுறையில் உள்ள பதிவேடுகளை ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவு செய்யவேண்டும்;

திருக்கோயில் நிலங்கள் மற்றும் கட்டடங்கள் விவரங்கள் பொதுமக்கள் இணையதளத்தில் பார்வையிடும் வகையில் ‘புவிசார் குறியீடு’ செய்து இணையத்தில் வெளியிட வேண்டும்;

கோயில்களின் பெயரில் உள்ள அசையும், அசையாச் சொத்துகளின் உரிமை மற்றும் ஆவணங்களையும், பிரதான சின்னங்களையும் சிற்பங்களையும் ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.

அதன் பெயரில், பழைமை வாய்ந்த ‘திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர் – அகிலாண்டேஸ்வரி கோவில்’ வளாகம் மற்றும் கற்தூண்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களை டிரோன் கேமரா மூலமாக வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியினை நேற்றிலிருந்து தொடங்கியுள்ளனர்.

இப்பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவடைந்துவிடும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ALSO READ:  சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories