bus free
bus

ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தவே கூடாது என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

தமிழக போக்குவரத்துத்துறை பேருந்து பயணத்தின் போது ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அறிவித்துள்ளனர். பேருந்து பயணத்தின் போது ஓட்டுநர்கள் கட்டாயமாக செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓட்டுநரின் செல்போனை நடத்துநரிடம் கொடுத்து வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் உரிமத்தை கையில் வைத்திருக்கவேண்டும் என்றும், இவற்றை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வுக்கு வரும்பொழுது காட்டுவதற்காக இவற்றை கடைபிடிக்க வேண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாயமாக பெயர் மற்றும் பணி எண்ணுடன் கூடிய பேஜ் அணிந்திருக்க வேண்டும். தமிழக போக்குவரத்துறை வெளியிட்டுள்ள இந்த உத்தரவுகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும்.

இதனை கடைபிடிக்க மீறுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, இந்த தவறுக்கு அவர்களே பொறுப்பாவார்கள் என்று தமிழக போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending