குமரி மாவட்ட திருக்கோயில்கள் பணியாளர்களுக்கு அறநிலையத்துறைக்கு ஈடான சம்பளம் தேவை!

உரத்த சிந்தனை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்

hrnce office e1561694728558 - 2026தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செங்கோட்டை வட்டார திருக்கோவில்களும் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்களின் கீழ்வருகின்றன.

இரு தினங்களுக்கு முன்னர் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் தரப்பில் இருந்து ஒரு வேலைவாய்ப்பு விளம்பர அறிவிப்பு வெளியிடப் பட்டது. இந்த விளம்பரத்தில் திருக்கோயில் பணிகளுக்கு குறிப்பிடப்பட்டுள்ள சம்பளம் தமிழகத்தின் பிற மாவட்ட கோவில்களில் உள்ள சம்பளத்தை விட மிக மிகக் குறைவு.

எனவே செங்கோட்டை வட்டார கோயில்கள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களில் பணியாற்றும் நபர்களுக்கு அறநிலையத்துறையின் மற்ற மாவட்ட திருக்கோயில்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.

இதற்காக, பணியாளர்கள் ஒன்று சேர்ந்து இதர மாவட்ட கோவில்களுக்கு இணையாக கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் செங்கோட்டை வட்டார கோவில் ஊழியர்களுக்கு சம்பளம் ஏன் வழங்கப்படவில்லை என்று சட்ட ரீதியாக தமிழக அரசைக் கேட்டு மனுக்களை அனுப்ப வேண்டும்.

மாத சம்பளம் வெறும் மூவாயிரம் ரூபாய் என்பது பேரதிர்ச்சி தருகிறது.

  • கே.ஹெச். கிருஷ்ணன்
    temple kanyakumari devasam board advt - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.