kummayam - 2026

குட்டிஸ் விரும்பும் கும்மாயம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
kummayam - 2026

கும்மாயம்

தேவையான பொருட்கள்: உளுத்தம்பருப்பு – ஒரு கப்
பச்சரிசி – கால் கப்
பாசிப்பருப்பு – அரை கப் பொடித்த கருப்பட்டி (அ) வெல்லம் – 2 கப்
நெய் – கால் கப்.

செய்முறை:
உளுத்தம்பருப்பு, அரிசி, பாசிப்பருப்பைத் தனித்தனியாக வெறும் வாணலியில் சேர்த்து மிதமான தீயில் சிவக்க வறுத்து எடுக்கவும். ஆறிய பின் ஒன்றாகச் சேர்த்து மெஷினில் கொடுத்து மாவாக அரைத்து காற்றுப்புகாத டப்பாவில் சேமிக்கவும். கருப்பட்டி (அ) வெல்லத்தைக் கரைத்து வடிகட்டவும். அதனுடன் அரை கப் மாவைச் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாதியளவு நெய்விட்டுச் சூடாக்கவும். அதனுடன் கரைத்த மாவைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, மீதி நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். மாவு நன்கு வெந்து கையில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.