munuki sambar - 2026

தினமும் ஒரே போல..? மாற்றி வைக்க முனுக்கி வைத்த சாம்பார்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
munuki sambar - 2026

முனுக்கி வைத்த சாம்பார்

தேவையான பொருட்கள்:
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தக்காளி – 3 (பொடியாக நறுக்கவும்) மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க:
துவரம்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
பச்சரிசி, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 6 (இதுவே முனுக்கிய பொடி)

தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்.

செய்முறை:
வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை வெறும் வாணலியில் சேர்த்து வறுத்து பவுடராக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து, வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இரண்டு டேபிள்ஸ்பூன் முனுக்கிய பொடியை மூன்று கப் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.