தள்ளிப் போகிறது புலி

சினி நியூஸ்

vijay-puli-movie கத்தி படத்தின் வெற்றி அடுத்து விஜய் சிம்புதேவன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட் செலவில் சரித்திர கால கதையில் நடித்து வருகிறாா். விஜய்யின் இரட்டை வேடத்தில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் புலி. இப்படத்தில் ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் என இரண்டு காதநாயகிகள் நடிக்க இவர்களுக்கு சமமான கதாபாத்திரத்தில் முன்னாள் கனவு கன்னி ஸ்ரீதேவி நடிக்கிறார். சுதீப்பும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு நட்டி ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.கே.டி. ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பொங்கலுக்கே வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது படத்தின் தலைப்பு மட்டுமே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று ‘புலி’யின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய்யின் தோற்றத்தைக் காண ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் இருப்பதால் தமிழ்ப் புத்தாண்டு வரும் நாளை அவரது ரசிகர்கள் எதிர் நோக்கியுள்ளனர்.

Posts by செங்கோட்டை ஸ்ரீராம்:

செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் | விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். | தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். | வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். | இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

https://www.dhinasari.com