ஹன்சிகாவுடனான உறவு நீடிக்க ஏங்கினேன்: சிம்பு

சினி நியூஸ்

simbu-hanzika-motwani வாலு படத்தின் போது சிம்புவின் காதல் வலையில் விழுந்தார் ஹன்சிகா. ஆனால் அந்தப் படம் முடியும் வரை கூட அவர்களின் காதல் நிலைக்கவில்லை. மூன்று மாதங்களில் சிம்புவின் காதல் வலை அறுந்தது. இந்நிலையில், ஹன்சிகாவுடன் ஏற்பட்ட காதல் பிரிவு குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் சிம்பு. அதில், பிரிவுக்குக் காரணம் நாங்கள் இருவருமே இல்லை. எங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் இல்லை. பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. நாங்கள் இருவரும் உள்ளன்போடு இருந்தோம். இந்த உறவு நீடிக்க வேண்டும் என்று நான் ஏங்கினேன். அந்த விருப்பத்தால், பிரிவு ஏற்பட்டதில் வருத்தப்பட்டேன் என்றார் சிம்பு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.