
வரகு பிரண்டை தோசை
தேவையான பொருட்கள்
2 கப் வரகு அரிசி
1/4 கப் உளுந்து சிறிது வெந்தயம்
10 நுனி கொழுந்து பிரண்டை துண்டுகள்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு செக்கு நல்ல எண்ணெய் / நெய்
செய்முறை
வரகு அரிசியையும், வெந்தயம், உளுந்தையும் தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.
ஊற வைத்த வரகரிசி, வெந்தயம், உளுந்தை அரைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து வைக்கவும்.
கணு நீக்கி பிரண்டையை பொடியாக நறுக்கி, எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும்.
ஆறியவுடன் நன்றாக அரைத்து வரகு அரிசி மாவுடன் கலக்கவும். மாவு 8 மணி நேரமாவது புளிக்க வேண்டும்.
தோசைக்கல்லை காயவைத்து அதில் மாவை தோசையாக ஊற்றி மூடி, இருபுறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.
பிரண்டை பசி உணர்வை தூண்டும், வரகு அரிசி மாதவிடாய் பிரச்னை உடைய பெண்களுக்கு ஏற்ற நல் உணவு. வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கும்.
பிரண்டை வரகு தோசை, சத்தான மருத்துவ குணம் நிரந்த காலை உணவு.