அவலுக்கென்ன அழகிய உப்புமா அவலுக்கென்ன

சமையல் புதிது

aval uppuma - 2026

உருளைக்கிழங்கு அவல் உப்புமா :

தேவையான பொருட்கள்;

உருளைக்கிழங்கு-8 அவல்-3 கப், தேங்காய் துருவல்- அரைமூடி, மஞ்சள் தூள் – 1 ஸ்பூன் ,கொத்தமல்லித்தழை- 1கட்டு , இஞ்சி = 1 துண்டு , எலுமிச்சை பழம்- அரை மூடி , பெருங்காயம்- சிறிது, பச்சை மிளகாய்- 8 , கடுகு- 1 ஸ்பூன், கடலைப் பருப்பு- 1 ஸ்பூன், முந்திரி பருப்பு -5  நெய்- 2 ஸ்பூன், உப்பு, எண்ணெய்- தேவையான அளவு.

செய்முறை :

அவலை ஊற வைக்க வேண்டும். உருளைக்கிழங்கை வெந்து தோலுரித்து மசித்துக் கொள்ள வேண்டும். வாணெலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப் பருப்பு ,முந்திரிபருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி பெருங்காயம் போட்டு தாளித்து பின் அவலையும்,மசித்த உருளைக்கிழங்கையும் கலந்து மஞ்சள் தூள் சேர்த்து ,உப்புத் தூவி தேங்காய் துருவல் சேர்த்து, நெய் விட்டு ,கொத்தமல்லித் தூவி, இறக்கும் போது எலுமிச்சைச் சாறு பிழியவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.