IMG 20220505 163531 - 2026

தங்கம் தருவதாக ரூ97லட்சம் மோசடி 7 பேர் கைது..

கிரைம் நியூஸ்

வேதாரண்யம் அருகே குறைந்த விலையில் தங்கம் தருவதாக ரூ97லட்சம் பண மோசடி செய்த 7 பேரை போலீசார் இன்று கைது செய்து இவர்களிடம் இருந்து 4 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த முருகன் என்பவர் நகைக்கடை வைத்துள்ளார். இவருக்கும் சின்னசேலத்தைச் சேர்ந்த தியாகு ஆசாரிக்கும் வியாபார ரீதியாக பழக்கம் இருந்து வந்துள்ளது. தற்சமயம் அட்சய திரிதியை வந்ததால் குறைந்த விலைக்கு அதாவது கிராமிற்கு ரூ. 400 குறைத்து தங்கம் வாங்கி தருவதாக கூறினாராம். 

இதை நம்பி கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முருகன் வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் பகுதியைச் சேர்ந்த பண்டரிநாதன் (65) என்பவரிடம் தொடர்பு கொண்டு பேசினாராம். முருகன் 2 கிலோ தங்கம் வேண்டும் கேட்டுள்ளார்.

இதையடுத்து கருப்பம்புலத்திற்கு 96 லட்சத்துடன் வந்த முருகனிடம் பண்டரிநாதன் 850 கிராம் தங்கத்தை கொடுத்து விட்டு பாக்கியை நாளை வந்து வாங்கி கொள்ளுங்கள் என அனுப்பி உள்ளார். 

இதையடுத்து முருகன் தான் அழைத்து வந்த நபரிடம் 850 கிராம் நகையை கொடுத்து விட்டு தனியே சென்ற போது பண்டரிநாதன் ஆட்களை அனுப்பி முருகனை மிரட்டி அடித்து அவரிடம் இருந்த தங்க சங்கிலி, மோதிரம் ஆகியவற்றை பறித்து கொண்டு சென்று உள்ளார்.

பாதிக்கப்பட்ட முருகன் வேதாரண்யம் போலீசில் புகார் செய்ததன் பேரில் தனிப்படை போலீசார் கருப்பம்புலத்தைச் சோ்ந்த பண்டரிநாதன் (65), கார் டிரைவா் திருச்சி விக்னேஷ் (29), சென்னை பாலகுமார் (32), திருத்துறைப்பூண்டி எழிலூரைச் சேர்ந்த துர்க்காதேவி (42), கருப்பம்புலம் செல்லத்துரை (43), வடமழை மணக்காடு தனுஷ்கொடி (32), திருத்துறைப்பூண்டி மணிமாறன் (25) ஆகிய 7 பேரை கைது செய்தனர். 

இதில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர். இவர்களிடம் இருந்து 4 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

IMG 20220505 163531 - 2026
IMG 20220505 163600 - 2026
IMG 20220505 163615 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.