தாயை டிரம்பில் வைத்து பூசிய மகன்..

சென்னை நீலாங்கரையில் தாயை டிரம்பில் வைத்து பூசிய மகனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

202205161317186619 son who buried his mother in a drum with cement SECVPF - 2026

சென்னை நீலாங்கரை பகுதியை சேர்ந்தவர் செண்பகம் (86). செண்பகத்திற்கு பாபு மற்றும் சுரேஷ் என இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பாபு திருமணமாகி தனது குடும்பத்துடன் தனியாக வசித்து வருகின்றார். இளைய மகன் சுரேஷ் (53) திருமணமாகி கெல்சி என்ற மனைவியும், சைமன் (18), சாரா (19) என இருபிள்ளைகள் உள்ளனர்.  மூதாட்டி செண்பகம் தனது இளைய மகன் சுரேஷ் உடன் வசித்து வந்துள்ளார். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட சுரேஷ் தனது மனைவி, பிள்ளைகளுடன் அடிக்கடி தகாறில் ஈடுபட்டு வந்ததால் கடந்த 8-ம் தேதி மனைவி கெல்சி தனது பிள்ளைகளுடன் பெருங்குடியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து செண்பகமும், சுரேஷ்சும் வீட்டில் தனியாக இருந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தாய் செண்பகத்தை பார்க்காததால் மூத்த மகன் பாபு இன்று காலை தாயை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, சுரேஷ் தனது அண்ணன் பாபுவை வீட்டில் நுழைய விடாமல் தடுத்தது தகராறு செய்ததுடன் தாய் குறித்து கேட்டதற்கு மழுப்பலாக பதிலளித்து வந்துள்ளார்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

 இதனால் சந்தேகமடைந்த பாபு தனது தாய் குறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது அவர்கள், கடந்த சில நாட்களாக செண்பகத்தை பார்க்கவில்லை என்றும் இது குறித்து சுரேஷிடம் கேட்டதற்கு முறையான பதில் அளிக்கவில்லை என்றும் தெரிவித்தனர். உடனே பாபு நீலாங்கரை போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுரேஷிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சுரேஷ், தனது தாய் செண்பகம் சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டதாகவும், அவரை வீட்டில் இருந்த டிரம்மில் போட்டு சிமெண்ட்டால் பூசி அடக்கம் செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ந்து போன போலீசார், டிரம்மில் உள்ள மூதாட்டி செண்பகம் உடலை எடுக்க முயன்றனர். ஆனால் உடலை எடுக்க முடியாத காரணத்தால், டிரம்புடன் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் மகன் சுரேஷிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

Entertainment News

Popular Categories