வரதட்சணை கேட்டு மனைவி மகளை வீட்டில் சுவர் கட்டி சிறைபிடித்த பலகோடி சொத்துக்கு அதிபரான கணவர்..

தெலுங்கானாவில்
7 வயதில் மகள் உள்ள நிலையில்  மனைவி வீட்டில் கூடுதல் வரதட்சணை கேட்டு தனது மனைவியை மகளை கொடுமைபடுத்தி வீட்டில் சுவர் கட்டி சிறைபிடித்த பலகோடி சொத்துக்கு அதிபரான கணவரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் புல்லாரெட்டி ஸ்வீட்ஸ் என்ற பெயரில் 200-க்கும் மேற்பட்ட சுவீட் கடைகளை நடத்தி வருபவர் ராகவாரெட்டி. தொழிலதிபரான இவரது மகன் ஏக் நாத் ரெட்டிக்கும் பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபரின் மகள் பிரகன்யாவுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தை உள்ளது.

திருமணத்தின் போது மாப்பிள்ளைக்கு ரூ.75 லட்சம் ரொக்க பணம், ரூ.9.5 லட்சம் மதிப்பில் தங்க வெள்ளி நகைகள், ரூ.35 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ் அது தவிர நாத்தனார் சீதனம் என்ற பெயரில் தனியாகவும் வரதட்சணை கொடுக்கப்பட்டுள்ளது.
மணமகள் குடும்பத்தாரிடம் இருந்து மொத்தம் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை பேரம் பேசி பெற்றதாக கூறப்படுகிறது.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

இது போதாதென்று ஐதராபாத்தில் வணிக வளாகம் ஒன்றை கூடுதல் வரதட்சணையாக கேட்டுள்ளனர். அது மட்டும் பிரகன்யாவின் பெற்றோர் வாங்கி கொடுக்கவில்லை.இது தொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. 7 வயதில் மகள் உள்ள நிலையில் ஏக் நாத் ரெட்டி கூடுதல் வரதட்சணை கேட்டு தனது மனைவியை கொடுமைபடுத்தியுள்ளார். மேலும் அவரை விவாகரத்து செய்ய முயன்றுள்ளார்.

2021 ஆம் ஆண்டு அதற்கான நடவடிக்கைகளை ஏக் நாத் ரெட்டி மேற்கொண்ட நிலையில் அவரது விவாகரத்து வழக்கு தள்ளுபடியானதால் மனைவியுடன் ஒரே வீட்டில் வசிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஏக்நாத் ரெட்டி கடந்த 10-ந்தேதி வீட்டின் கீழ் பகுதியில் தனது மனைவி மற்றும் மகள் தங்கி இருக்கும் அறையின் மின்சாரத்தையும், தண்ணீர் இணைப்பையும் துண்டித்துள்ளார்.

2 பேரையும் சிறைவைக்கும் எண்ணத்தில் அவர்களது அறையில் இருந்து வெளியேற விடாமல் தடுப்புச்சுவர் கட்டி மனைவியும் மகளையும் கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் வீட்டிற்குள் சுவர் கட்டி சிறைவைக்கப்பட்டுள்ள தகவலை தனது பெற்றோருக்கு பிரகன்யா தெரிவித்தார். போலீசாருடன் அங்கு விரைந்து சென்ற அவரது பெற்றோர் தடுப்பு சுவரை உடைத்து பிரகன்யாவையும் அவரது 7 வயது மகளையும் மீட்டனர்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

மேலும் தனது கணவரும், அவரது பெற்றோரும் சேர்ந்து தன்னை தலையணையால் அமுக்கி கொலை செய்ய முயன்றதாகவும் பிரகன்யா போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து பஞ்சகுட்டா போலீசார் பிரக்னா அளித்த புகாரின் பேரில், ஏக்நாத், அவரது பெற்றோர் ராகவா மற்றும் பாரதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், ராகவா ரெட்டி மற்றும் பாரதி மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டத்தின் கீழ், பேகம்பேட் வருவாய் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
கோடிக்கணக்கில் சொத்து இருந்தும் மேலும் வரதட்சணை கேட்டு மனைவி, மகளை தொழிலதிபர் குடும்பம் சித்ரவதை செய்துள்ள இந்த சம்பவம் தெலுங்கானா, ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

images 38 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

Entertainment News

Popular Categories