
அருப்புக்கோட்டையில் விசாரணைக்கு அழைத்து வந்தவர் மரணம் அடைந்ததாக கூறி ஏற்பட்ட சர்ச்சையில் மனநல காப்பகத்தை சேர்ந்த மூன்று பேர் கைது செய்து சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அருப்புக்கோட்டையில்விசாரணைக்காக அழைத்து வந்தவர் மரணமடைந்ததாக கூறி காவல்துறையினர் மீது களங்கம் கூறிய சம்பவத்தில் மனநல காப்பகத்தில் உள்ள மூன்று வாலிபர்கள் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 9ந் தேதி எம்.டி.ஆர் நகரில் ஒரு வீட்டில் வாலிபர் உள்ளே புகுந்ததாக கூறி அப்பகுதி மக்கள் ஒருவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் காவல்துறையினர் விசாரணையில் செம்பட்டியைச் சேர்ந்த தங்கமாரி என்பவருடைய மகன் தங்கப்பாண்டி /33 எனவும் அவர் மனநிலை சரியில்லாததால் அப்படி நடந்து கொண்டார் எனவும் தெரியவர அவர் விடுக்கப்பட்டார்.
அதன்பின் காவல்துறையினர் கூறிய தகவலின் அடிப்படையில்
விடுவிக்கப்பட்ட தங்கபாண்டியனை அவரது மனைவிமற்றும் உறவினர்கள் அருப்புக்கோட்டை அருகே உள்ள
ராமானுஜபுரத்தில் அன்னை மனநல காப்பகத்தில் சேர்த்து விட்டனர்.
இந்நிலையில் எம்.டி.ஆர். நகர் பகுதி மக்கள் விசாரணைக்கு அழைத்து சென்றவரை ஏன் விடுவித்தீர்கள் என காவல்துறையினரிடம் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி கோரிக்கை வைத்தனர்
இந்நிலையில் அன்று மாலை காவல்துறையினர் அன்னை இல்லத்திற்கு சென்று தங்கபாண்டியினை விசாரணை செய்வதற்காக அழைப்பு வந்துள்ளனர்.
பின்பு மீண்டும் இரவோடு இரவாக அன்னை மனநல காப்பகத்தில் தங்கபாண்டியனை ஒப்படைத்துவிட்டனர் .
காலை ஐந்து மணி அளவில் தங்கபாண்டியனின் உடல் நலம் மிக மோசமாக இருப்பதைக் கண்டு மனநல காப்பகத்தினர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்
இதற்கிடையில் தங்கபாண்டியன் இறந்து விடுகிறார். பின்பு அவரது மனைவி கோகிலா தேவிமற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது
தங்கப்பாண்டியன் மனைவி கோகிலா தேவி அரசு மருத்துவமனைக்கு வந்து மனநல காப்பகத்தில் இருந்து என் கணவரை ஏன் விசாரணைக்கு அழைத்து வந்தீர்கள் என்று காவல்துறையிடம் கேள்வி எழுப்பினார்
தன் கணவரை காவல் துறை தான் அடித்துக் கொன்று விட்டதாக புகார் தெரிவித்தார்.
அதன் பின் செம்பட்டி மற்றும் அப்பகுதியை சுற்றியுள்ள தங்கபாண்டியனின் உறவினர்கள் மற்றும் சமூகத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர் இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி க்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். விருதுநகர் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் சாவித்திரி தலைமையில் தங்கபாண்டியன் மரணம் குறித்து விசாரணை நடந்து வந்தது. தற்போது விசாரணையில் மனநல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட தங்கபாண்டியன் அதிகாலை 4 மணி அளவில் கைகளை கட்டி கால்களை கட்டி அவர் மேல் ஏறி உட்கார்ந்து காயப்படுத்தி கொடுமைப்படுத்தியுள்ள விவரம் தெரியவந்தது அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் தங்க பாண்டியனை துன்புறுத்தியது அம்பலமானது .
இதனால் தங்க பாண்டியன் மரணம் அடைந்ததாக தெரிகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சி பி சி ஐ டி போலீசார் மனநல காப்பகத்தில் பணிபுரியும் சிவகாசியைச் சேர்ந்த வினோத் குமார் 24
கல்குறிச்சியைச் சேர்ந்த
ஆகாஷ் என்ற ராஜேந்திர குமார் 21மற்றும்
சுப்பிரமணி 22 என என்ற மூன்று வாலிபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.