
சிவகாசி அருகே கல்லூரி பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து மூன்று லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே உள்ள ரிசர்வ் லயன் லட்சுமி நகர் பகுதியில் சேர்ந்தவர்
கார்த்தீபன். இவரும் இவரது மனைவியும் பிரியா வேறு வேறு கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கம் போல் பணிக்கு சென்று வீடு திரும்பிய பொழுது வீட்டின் பின்னால் உள்ள கதவு உடைக்கப்பட்டும் , அடுத்தடுத்த அறைகளில் உள்ள பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு
அதிர்ச்சி அடைந்தனர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து வந்த திருத்தங்கல் காவல்துறையினர் சம்பவம் குறித்து முழுமையாக விசாரனை நடத்தப்பட்டன மேலும் விசாரணையில் 8 சவரண் சுமார் மூன்று லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளடிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனைகளில் ஈடுபட்ட காவல்துறையினர் கொள்ளை சம்பவம் குறித்து திருத்தங்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களுக்கு போலீஸார் வலைவீச்சு தேடி வருகின்றனர்
