கிறிஸ்துவ பள்ளியில் வகுப்பறையில் தூக்கிட்டு மாணவி தற்கொலை!

கல்வி கிரைம் நியூஸ்
thukku 1 - 2026

மதுரையில் பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கே.புதூர், காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த முத்து மற்றும் சுந்தரி தம்பதியினருக்கு அர்ச்சனா என்ற 16 வயது மகள் இருந்தார். இவர் அந்தப் பகுதியில் உள்ள லூர்து அன்னை மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.

classroom 2 - 2026

இன்று வழக்கத்தை விட சீக்கிரமாகவே பள்ளிக்கு சென்ற மாணவி, வீட்டில் இருந்து கொண்டு வந்த புடவையை வகுப்பறையில் மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை அடுத்து பின்னர் வகுப்பறைக்கு வந்த சில மாணவிகள் பார்த்து அதிர்ச்சியாகி, பள்ளி நிர்வாகத்துக்கு சொல்ல அவர்கள் அர்ச்சனாவின் பெற்றோருக்கு தகவல் சொல்லியுள்ளனர்.

madurai school - 2026

அங்கு திரண்ட அர்ச்சனாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி நிர்வாகிகளோடு வாக்குவாதத்தில் ஈடுபட அங்கே பதற்றமான சூழ்நிலை உருவானது. இதையடுத்து பள்ளிக்கு காவல்துறையினரால் காவல் போடப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.