பெண் காவலருக்கே பேருந்தில் பாலியல் தொல்லை!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
bus1 - 2026

தில்லியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் 29 வயதான பெண், கான்ஸ்டபிலாக பணிபுரிகிறார். அவர் கடந்த புதன் கிழமையன்று தன்னுடைய வேலைக்கு செல்ல அங்குள்ள ஒரு பேருந்தில் ஏறினார்.

அப்போது அந்த பெண்ணை தொடர்ந்து வந்து, ஒரு இளைஞரும் அதே பேருந்தில் ஏறியுள்ளார். அதன் பிறகு அந்த பெண் கான்ஸ்ட்டபிள் சீருடையில் இருப்பதை தெரிந்தும், அந்த இளைஞர் அந்த பெண் போலீசின் பின்னால் நின்று அவரை தொட்டுள்ளார். அதை கண்ட அந்த பெண் அவரை விட்டு விலகி நின்றுள்ளார். அதன் பிறகு அவரை தொடர்ந்து சென்று அவரின் தோள் மீது உரசியுள்ளார். அதனால் அந்த பெண் போலீசுக்கு கோபம் வந்து அவரிடம் உரசாமல் தள்ளி நிற்க சொன்னார்.

அதை கேட்ட அந்த இளைஞர், அந்த பெண் போலீசிடம் கூட்டத்தில் தெரியாமல் இடித்து விட்டதாக கூறியுள்ளார். ஆனால் அதன் பிறகு மீண்டும் மீண்டும் இதேபோல அவர் பேருந்தில் வன்கொடுமை செய்ததால் அந்த பெண் போலீஸ் அவரை திட்டியுள்ளார்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

இதனால் இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் அந்த வாலிபர் அவரிடமிருந்த ஹெல்மெட்டால் அந்த பெண் போலீசார் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

இந்த தாக்குதலில் நிலை குலைந்து போன அந்த பெண் அங்கேயே அழுதுள்ளார். ஆனால் அந்த பேருந்திலிருந்த ஒருவர் கூட அந்த பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை. அதன் பிறகு அந்த இளைஞர் மீது புகாரரளிக்க அவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார்.

அதன் பிறகு அவர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். போலீசார் இந்த வன்கொடுமை பற்றி வழக்கு பதிந்து அந்த இளைஞரை தேடி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.