அதிர்ச்சி: 30 பொறியியல் கல்லூரிகள் கலைக் கல்லூரிகளாக மாற்ற விண்ணப்பம்!

Published:

colloge 1 - 2026

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் கடந்த 3 ஆண்டுகளாக மாணவர்கள் நிரப்பப்படாமல் உள்ளன. ஏற்கனவே 50-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு சில கல்லூரிகள் மூடப்படும் நிலையில் உள்ளன

இந்த நிலையில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கு ஆர்வம் காட்டவில்லை என்பதும் பிகாம் மற்றும் கணினி படிப்புகளுக்கு மட்டுமே ஆர்வம் உள்ளதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் சென்னை நாமக்கல் உள்பட 30 பொறியியல் கல்லூரிகள் கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றம் செய்ய விண்ணப்பம் செய்துள்ளதாக உயர் கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் ஏற்கனவே தமிழகத்தில் 767 கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Related articles

Recent articles

spot_img