cat 3 - 2026

உள்ளே போய் உட்காரலாம்.. பானைக்குள் போன பூனை!

சற்றுமுன் அடடே... அப்படியா? பொது தகவல்கள்
cat 3 - 2026

வைரலாகி வரும் ஒரு வீடியோவில் பூனை ஒன்று கண்ணாடி பானைக்குள் தவறி விழுந்து வெளியேற முயற்சிக்கும் காட்சி ஒன்று சிரிப்பை வரவைக்கிறது.

ட்விட்டரில் பல விலங்குகளின் அரிய காட்சிகளை பகிரும் சிசிடிவி இடியட்ஸ் என்கிற கணக்கு பக்கத்தில் தான் இந்த பூனையின் வீடியோவும் பகிரப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், ஒரு மேஜையின் மீது பளபளப்பான கண்ணாடி பானை ஒன்று வைக்கப்பட்டுள்ளது, அதனருகே செம்பழுப்பு நிறத்தில் அழகிய பூனை ஒன்று நின்றுகொண்டு இருக்கிறது.

பின்னர் அந்த கண்ணாடிக்குள் என்ன இருக்கிறதென்று பூனை முதலில் தலையை விட்டு எட்டி பார்க்கிறது, மெதுவாக தனது முன்னங்கால்கள் இரண்டையும் பானையினுள் விட்டு பாதி உடல் பானைக்குள் சென்று விடுகிறது.

அதனைத்தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக தனது முழு உடலையும் கண்ணாடி குவளைக்குள் இழுத்துக்கொண்டு திருதிருவென்று முழிக்கிறது. பின்னர் அந்த பூனை மெதுவாக வெளியேற முயற்சிப்பதுடன் இந்த வீடியோ நிறைவுபெறுகிறது.

இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவிற்கு இதுவரை பதின்மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளது.

ஒரு பயனர் பூனையின் செயலை சோ கியூட் என்று கமெண்ட் செய்துள்ளார், மற்றொருவர் புத்திசாலியான பூனை என்று கமெண்ட் செய்துள்ளார்.

இந்த வீடியோவுடன் லிக்யூட் கேட் என்கிற வசனத்துடன் சிரிப்பு எமோஜியும் சேர்த்து கேப்ஷனாக பதிவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.