cow
file pic

கேரள யானை மாதிரியே உணவு பொருளில் வெடிகுண்டு வைத்துள்ளனர். அந்த யானையை போலவே உணவை சாப்பிட வந்தபோது, வெடி வெடித்து ஒரு பசுவின் வாய் படுகாயமடைந்துள்ளது.

இந்த சம்பவம் இமாச்சல பிரதேசத்தில் நடந்துள்ளது. கேரளாவில் யானை வெடி வைத்து கொன்ற விவகாரமே இன்னும் ஒரு முடிவுக்கு வராமல் உள்ளது. குற்றவாளிகளை இன்னமும் தேடி வருகிறார்கள்.

யானை கொல்லப்பட்ட வழக்கில் தினந்தோறும் புது புது தகவல்களும் வெளியாகி வரும் நிலையில், பசுவுக்கும் இதே போல ஒரு நிலைமை நேர்ந்துள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது. இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தின் ஜன்துட்டா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கடந்த மே 26-ம் தேதி ஒரு கர்ப்பிணி பசு, கோதுமை மாவை பசிக்காக சாப்பிட்டுள்ளது.. அதை சாப்பிட்டதுமே பசுவின் வாய் வெடித்து ரத்தம் கொட்ட தொடங்கி உள்ளது. இதையடுத்து போலீசார் விரைந்து வந்து இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டனர்.

அப்போதுதான், கோதுமை மாவு பந்துக்குள் வெடிகுண்டு வெடித்துள்ளதும்,அதை சாப்பிட வந்தபோதுதான் பசுவின் வாய் சிதைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

இதை பார்த்து கொதித்து போன மக்கள், மாபாதக செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கோதுமை மாவில் யார் வெடிகுண்டை வைத்தது என தெரியவில்லை.

பக்கத்து வீட்டுக்காரர்தான் இந்த காரியத்தை செய்திருக்க கூடும் என்றும், வெடிபொருட்களால் நிரப்பப்பட்ட கோதுமை மாவினை அவர்தான் பசுவுக்கு தந்திருப்பார் என்றும் பசுவின் உரிமையாளர் குற்றஞ்சாட்டுகிறார்.

எனினும் உண்மைதன்மையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். தங்கள் விவசாய பயிர்களை பசுக்கள் நாசம் செய்வதாலேயே இவ்வாறு கொலை செய்ய முயன்றிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending