ஜூலையில் பிளஸ் 2 தேர்வு முடிவு: அமைச்சர் தகவல்!

Published:

SENGOTTAIAN
SENGOTTAIAN

சென்னை: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது:

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் ஜூலை மாதம் வெளியாகும். தற்போதைக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை. பள்ளிகள் திறப்பு தாமதமாவதால், பாடங்கள் குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

இதற்காக 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஆலோசனைக்கு பிறகு முதல்வருடன் பேசி பாடங்கள் குறைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார் அமைச்சர்.

Related articles

Recent articles

spot_img